PRAYING FOR THE WORLD | CALL TODAY -  8546999000
JOIN HANDS IN BUILDING GOD'S KINGDOM   



2026ம் ஆண்டுக்கான வாக்குத்தத்தப் பாடல் 'கௌரவிப்பார்'

2026ம் ஆண்டுக்கான வாக்குத்தத்தப் பாடல் 'கௌரவிப்பார்' வெளியாகியுள்ளது. இப்பாடல் உங்களை மறுரூபப்படுத்தும். 2026ம் ஆண்டுக்கு Dr. பால் தினகரனுக்குக் கொடுக்கப்பட்ட, "உன்னிடத்திலிருந்து தோன்றினவர்கள் பூர்வமுதல் பாழாய்க்கிடந்த ஸ்தலங்களைக் கட்டுவார்கள்; தலைமுறை தலைமுறையாக இருக்கும் அஸ்திபாரங்கள்மேல் நீ கட்டுவாய்; திறப்பானதை அடைக்கிறவன் என்றும், குடியிருக்கும்படி பாதைகளைத் திருத்துகிறவன் என்றும் நீ பெயர் பெறுவாய்" (ஏசாயா 58:12) என்ற தேவனுடைய வாக்குத்தத்தத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட வல்லமை நிறைந்த இப்பாடல் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

இதைக் கேட்கும்போதே, இந்த வாக்குத்தத்தத்தை உங்கள் வாழ்வின்மேல் அறிவித்து, 2026 புத்தாண்டில் தேவன் உங்களை எவ்வாறு முடிசூட்டி, உயர்த்தி, பெருகப்பண்ணுவார் என்பதை அனுபவியுங்கள். இந்தப் பாடலை உங்களுக்கு அன்பானோரோடு பகிர்ந்துகொண்டு, மற்றவர்களுக்கும் ஆசீர்வாதமாக விளங்குங்கள்.

புத்தாண்டு, தேவனுடைய உச்சிதமான ஆசீர்வாதங்களால் நிறைந்து செழித்திருக்க வாழ்த்துகிறோம்.



float-callfloat-prayerfloat-dollar