"மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன். உங்கள் குமாரரும் உங்கள்  குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்.’ (அப்போஸ்தலர் 2:17)

உற்சாகமூட்டும்  வார்த்தை

எங்களுக்கு மிகவும் பிரியமானவரே! தேவன் நமக்கு அளிக்கும்  ஈவுதான் பரிசுத்த ஆவியானவர். இயேசுவில் விசுவாசமுள்ள யாவருக்கும் அவர் இலவசமாக அருளப்படுகிறார். நாம் பரிசுத்தாவியால் நிரப்பப்பட்டிருக்கும்போது,  பயம், தோல்வி மற்றும் பிசாசு அல்லது பொல்லாத மக்கள் என்ன செய்கிறார்கள்  போன்றவற்றை பேசுவதை நிறுத்திவிட்டு; தேவன் என்னை நேசிக்கிறார், அவர் எனக்கென்று நல்ல அருமையான எதிர்காலத்தை வைத்திருக்கிறார், அவர் என்னை உயர் ஸ்தானத்திற்குக் கொண்டு செல்வார்  என்று சொல்லும் கர்த்தருடைய வார்த்தைகளை நாம்  பேசத் தொடங்குவோம். நாம் தீர்க்கதரிசனம் சொல்ல ஆரம்பிப்போம், தேவன் பேசுகிறபடி, ஜீவ வார்த்தைகளை நாம் பேச ஆரம்பிப்போம்.

கர்த்தருடைய ஆவியானவர் நமக்குள் வரும்போது என்ன நடக்கிறது? இயேசுவைப்போலவே நாமும் பரிசுத்தத்தில் நடக்க அவர் நமக்கு கிருபைத் தருகிறார். நாம் ஞானத்திலும், வளர்த்தியிலும், மனித தயவிலும் வளருவோம், நமது தனிப்பட்ட வாழ்க்கையில் உயர் ஸ்தலத்திற்கு எழும்புவோம். மற்றவர்களுக்கு  ஞானத்தைப் பேசுவோம், நமது வேலையில் உயருவோம், பரிசுத்த ஆவியானவர் மூலமாக பிரச்சனைகளுக்குத் தீர்வுகளை வழங்குவோம். (வெளிபடுத்தல். 22:11,12 ;  எபிரெயர் 12:14)

பரிசுத்தம் எப்படி வருகிறது? நம்மைச் சுற்றியுள்ள அனைவருடனும் நாம் சமாதானமாக வாழும்போதுதான் அது வருகிறது. நாம் யாரிடமும் வெறுப்பு காண்பிக்காமல், மன்னித்து, நம் சகோதர சகோதரிகளுடன் ஒப்புரவாகும்போது, அவர் ஐக்கியத்தை மீண்டும் கட்டுவது மட்டுமல்லாது, நம்மைப் பரிசுத்தமாக பாதுகாத்து,  அனைவரையும் நேசிக்கும்படி நமக்குக் கிருபை தருவார். (ஏசாயா 1:15; 1 யோவான் 3:15 ; எபிரெயர் 12:24)

மத்தேயு 18:3 மற்றும் 2 இராஜாக்கள் 2:9-ன்படி, இன்று நாம் நம்மைத் தாழ்த்தி, தேவனுடைய ஆவியால் நிரப்பப்படவும், அவருடைய வெளிப்பாடுகளை நமக்கு வெளிப்படுத்தும்படியாகவும் நாம் தேவனை நோக்கிக் கூப்பிடுவோமாக.(லூக்கா 10:21).

“இயேசு அழைக்கிறார் ஊழியத்தின் மூலம் தொடப்பட்ட அனைவரையும் அபிஷேகிப்பது என்னுடைய சித்தமாயிருக்கிறது, அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்வதும் இயேசுவைப் பற்றி தீர்க்கதரிசனம் சொல்வதும், சாட்சியளிப்பதும் என்னுடைய சித்தமாயிருக்கிறது. குமாரரும், குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லும்படி எழுப்புகிற எந்த ஊழியமும் நிலைத்திருக்கும்.” என்று மார்ச் 14, 2008 அன்று, பரிசுத்த ஆவியானவர் எதிர்காலத்திற்கான தேவனுடைய  திட்டங்களை வெளிப்படுத்தினார்.  அந்த வெளிப்பாட்டிற்கு கீழ்ப்படிதலில்,  நாடு முழுவதும் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் 'தீர்க்கதரிசன ஜெபப் பயிற்சியை' நடத்தத் தொடங்கினோம், அதன் மூலம் பங்காளர்கள்  தீர்க்கதரிசன ஜெப அபிஷேகத்தில் பயிற்சி பெற்று, ஆவியில் பெலப்படுத்தப்பட்டுள்ளனர். இதினிமித்தமாக, இயேசு அழைக்கிறார் ஜெப கோபுர ஊழியம் நாடு முழுவதும் விரிவடைந்து, பெருகி இன்று கோடிக்கணக்கான மக்களுக்கு ஆசீர்வாதமாக மாறியுள்ளது.

ஜெபம்:    “பிதாவே, உமது ஆவியால் என்னை நிரப்பும். உலகிற்கு உமது அன்பைப் பிரதிபலிக்கும் உமது மகனாக/மகளாக என்னை மாற்றும், ஆமென்.”


தலைமை இயக்க அதிகாரியின் மேசையிலிருந்து

உங்கள் மூலமாக - ஆகஸ்ட், 2025-ல் ஊழியத்தில் உண்டான நல்தாக்கங்கள்.

உங்கள் பிரார்த்தனைகள் மற்றும் ஆதரவுக்கு நன்றி. இந்த மாதம் இயேசுவின் அன்பினால் 20 லட்சத்திற்கும் அதிகமான மக்களை நாங்கள் சென்றடைய முடிந்தது:

  • ஜெப கோபுரங்களில் 1,53,000 பார்வையாளர்கள் நேரில் பிரார்த்தனை செய்துகொண்டனர்.
  • 24x7 பிரார்த்தனை உதவி எண்கள் மூலம் 3,78,000 அழைப்புகளுக்குப்  பிரார்த்தனைகள் செய்யப்பட்டன.
  • தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் 10 லட்சத்திற்கும் அதிகமான  பார்வையாளர்களுக்கு விசுவாசத்தோடுகூட ஊழியம் செய்யப்பட்டது.
  • 58,300 கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல்கள் பெறப்பட்டு,  பிரார்த்தனை செய்யப்பட்டன  மற்றும் பதிலளிக்கப்பட்டன.
  • பசித்தவர்களுக்கு 19,300 உணவுகள் வழங்கப்பட்டன
  • பிறந்தநாள் மற்றும் திருமண நாள் பிரார்த்தனைகள் மூலம் 53,700 பேர் ஆசீர்வதிக்கப்பட்டனர்.

இங்கே குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு எண்ணும் ஒரு வாழ்க்கை, எனவே, அவர்களுக்கு அற்புதங்களைக் கொண்டு வருவதில் நீங்கள் ஒரு பகுதியாக இருக்கிறீர்கள்.

நம்பிக்கையின் சாட்சி:

எங்கள் 24x7 ஜெப கோபுரத்தைத் தொடர்புகொண்ட எங்கள் அழைப்பாளர்களில் ஒருவர் அளித்த சாட்சி:
“எனது வேலையை நான் இழந்த பிறகு, எனக்குள் இருந்த அனைத்து நம்பிக்கையையும் இழந்துவிட்டேன். நான் ஜெப கோபுரத்தைத் தொடர்பு கொண்டபோது, அங்கிருந்த ஜெப வீரர் என்னுடன் ஜெபித்து, ஆண்டவரை நம்பும்படி என்னை ஊக்குவித்தார். என்ன ஆச்சரியம்!  ஒரு வாரத்திற்குள், எனக்கு ஒரு வேலை வாய்ப்பு கடிதம் வந்தது. என் நம்பிக்கை திரும்பி வந்தது.  ஜெபத்தில் என்னுடன் நின்ற ஜெப வீரர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.”

நீங்கள் பங்காளராய் இருப்பதன் கனி இதுதான்.

ஊழியத்தின் முக்கிய அம்சம் - காட்கோபர், மும்பை

வேதனை, பொருளாதாரத் தேவைகள், குடும்பப் போராட்டங்கள் மற்றும் ஆவிக்குரிய யுத்தங்களில் இருக்கும் காட்கோபரில் உள்ள 6,00,000 மக்கள்மீது இந்த மாதம் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்.

இங்கேயுள்ள ஜெப கோபுரத்தை, அதிக ஜெப மன்றாட்டு ஜெபவீரர்கள், வெளி ஊழியங்கள் மற்றும் எழுப்புதல் கூட்டங்கள் மூலம் பெலப்படுத்த நாங்கள் தயாராகி வருகிறோம்.

உங்கள் பிரார்த்தனையும் மற்றும் ஆதரவு இந்த காட்கோபர்,  மும்பை  மக்களுக்கு மட்டுமல்ல, உங்கள் குடும்பத்திற்கும் தேவைப்படுகிற அற்புதங்களுக்கான வழியைத் திறக்கும்.

காட்கோபர் ஜெப கோபுரத்திற்கு இன்றே ஆதரவளியுங்கள்: https://www.jesuscalls.org/donate

காருண்யா பல்கலைக்கழகம் – கல்வி மூலம் மறுரூபத்தை ஏற்படுத்துகிறது.

காருண்யா இளம் மனங்களை நம்பிக்கை மற்றும் புதுமையுடன் தொடர்ந்து உயர்த்தி வருகிறது.

  • இஸ்ரோவின் தேசிய ஹேக்கத்தானில் நடைபெற்ற 8,700 குழுக்களில் காருண்யா பல்கலைக்கழக மாணவர்கள் 4வது இடத்தைப் பிடித்தனர்.
  • இந்த ஆண்டு 70 சர்வதேச மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.
  • ஏழை மற்றும் தகுதியான மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ₹10 கோடி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
  • கிராமப்புற சமூகங்களுக்கு சுகாதாரப் பராமரிப்பை வழங்குவதற்காக காருண்யா மருத்துவமனை "சக்கரங்களில் மருத்துவமனை" என்ற சேவையைத் தொடங்கியது.

உங்கள் ஜெபமானது, விசுவாசம், அறிவியல் மற்றும் சேவையில் நாளைய தலைவர்களை வடிவமைக்கிறது.

சீஷா – அன்பு, இரக்கம் நடைமுறையில்

சீஷா மூலம், ஒவ்வொரு நாளும் பலருடைய  வாழ்க்கை மாற்றமடைந்து வருகின்றன:

  • வசதி, வாய்ப்பற்ற பிள்ளைகளுக்கு 15,000 ஸ்கூல் கிட் வழங்கப்பட்டன.
  • இந்தியா முழுவதும் இயங்கும் சீஷாவின் 49 கற்றல் மையங்களோடுகூட, இந்த மாதம் 8 புதிய மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
  • ஊனமுற்ற பிள்ளைகள், முதியவர்கள், கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஏழைகள் சீஷா மூலம் தொடர்ந்து கவனிப்பையும் நம்பிக்கையையும் பெறுகிறார்கள்.

உங்கள் இரக்கத்தின் விதைகள் நித்திய கனிகளைத் தருகின்றன. (சங்கீதம் 65:11)

 

நன்றி, பங்காளரே!

55 ஆண்டுகளாக, இயேசு அழைக்கிறார் ஊழியங்கள் பிரார்த்தனை, தொலைக்காட்சி, கல்வி மற்றும் இரக்கம் மூலம் கோடிக்கணக்கான மக்களுக்கு சேவை செய்துள்ளது. உங்கள் உண்மையுள்ள ஜெபங்களாலும், காணிக்கைகளாலும்தான், இந்த ஒவ்வொரு நபருக்கும் நாங்கள் சேவை செய்ய முடிந்தது. எனவே, களிகூருங்கள், மக்களுடைய வாழ்வைக் குணமாக்கும் இந்த ஊழியத்தில் ஒரு பகுதியாக இருக்கும்படி, ஆண்டவர் உங்களைத் தெரிந்துகொண்டிருக்கிறார்.

வேதனையில் வாடும் கோடிக்கணக்கானவர்களுக்கு நம்பிக்கை, சுகம் மற்றும் இரட்சிப்பைக் கொண்டுவருவதில் நாம் இணைந்து தொடர்ந்து செயல்படுவோமாக.

 

உங்கள் ஜெப விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்: https://www.jesuscalls.org/prayer
ஒரு உயிரைக் காப்பாற்ற ஒரு ஆத்துமாவை இரட்சிக்க  நன்கொடை அளிக்கவும்: https://www.jesuscalls.org/donate
தீர்க்கதரிசன ஜெபத்தில் பயிற்சி பெறுங்கள்: https://academy.prayertoweronline.org