வார்த்தையாகிய இயேசு உங்களுக்குள் வாழும்போது சுகமும் அற்புதங்களும் ஆசீர்வாதங்களும் பின்தொடரும்....
எங்கள் புதிய பாடல்கள்


The Promise 2026 (Kannada)


The Promise 2026


The Promise 2026 (Telugu)


The Promise 2026 (Tamil)


Karthar Nam Saarbil


The Promise 2026 (Kannada)


The Promise 2026


The Promise 2026 (Telugu)


The Promise 2026 (Tamil)


Karthar Nam Saarbil
ஆசீர்வாத திட்டங்கள்
சாட்சியங்கள்

Kerala
நான் ஒரு இளம் பங்காளர். கர்த்தர் என் வாழ்வில் அசைவாடின விதத்தை நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஆகஸ்ட் 31 ஆம் தேதி, நான் நர்சிங்கிற்கான தொழில்சார் ஆங்கிலத் தேர்வை (OET) எழுதினேன். நான் கேட்கும் மற்றும் பேசும் பகுதிகள் பற்றி மிகவும் கவலையாக இருந்தேன். இந்நிலையில் நான் ஜெபத்திற்காக Dr.பால் தினகரன் அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். அவரிடமிருந்து பதிலை பெற்றவுடன் ஒரு அமைதியை உணர்ந்தேன். தேர்விற்கு முன்னும் பின்னும் நான் இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்திற்கு சென்றேன். அவர்களுடைய ஜெபங்கள் என் விசுவாசத்தையும் தன்னம்பிக்கையையும் பெருகச் செய்தது. கேட்கும் தொகுதி மிகவும் கடினமாக இருந்தபோதிலும், ஆண்டவர் என்னை ஒருபோதும் தோல்வியடையச் செய்ய மாட்டார் என்ற நம்பிக்கையை நான் உறுதியாகப் பிடித்துக் கொண்டேன். தேர்வு முடிவுகள் வந்தபோது, நான் ஆச்சரியப்பட்டேன். எனது முதல் முயற்சியிலேயே அனைத்து தொகுதிகளிலும் பி தரத்துடன் தேர்ச்சி பெற்றேன். இந்த வெற்றி முற்றிலும் ஆண்டவருடைய தெய்வீக ஞானத்தாலும் கிருபையாலும் கிடைத்தது. ஏப்ரல் மாதத்தில், நான் மீண்டும் பதட்டமாக இருந்தேன். ஆதார் பிரச்சனையால் எனது இறுதியாண்டு உதவித்தொகை வரவு வைக்கப்படவில்லை. பல மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் இருந்தபோதிலும், எதுவும் வேலை செய்யவில்லை. ஆண்டவர் என் ஜெபத்திற்கு பதிலளித்தால், இயேசு அழைக்கிறார் ஊழியத்திற்கு ஒரு பகுதியை நன்கொடையாக வழங்குவதாக பொருத்தனை செய்து ஜெபித்தேன். என்ன ஆச்சரியம்! எனது தேர்வு முடிவுகள் வெளியான மறுநாள், உதவித்தொகை எனக்கு வரவு வைக்கப்பட்டது. வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு நன்றியுடன், நான் என் பொருத்தனையை நிறைவேற்றி நன்றி காணிக்கை அனுப்பினேன். ஆண்டவர் செய்த அற்புதத்திற்காக அவருக்கே துதிகளையும், ஸ்தோத்திரங்களையும் ஏறெடுக்கிறேன். மேலும் Dr.பால் தினகரன் அவர்களுக்கும், இயேசு அழைக்கிறார் ஜெப வீரர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இளம் பங்காளர் திட்டத்தின் மூலம் ஆண்டவருடைய வல்லமையை நான் முழுமையாக அனுபவித்தேன்.

Chennai
சுகமாக்கப்பட்டு, ஆசீர்வதிக்கப்பட்டார்
நீண்ட காலமாக, நான் கருத்தரிக்க விரும்பினேன். ஆனால் ஒரு கருச்சிதைவுக்கு பிறகு, நான் துக்கத்தில் மூழ்கினேன். இந்த வேதனையான சூழ்நிலையில் நான் குடும்ப ஆசீர்வாத திட்டத்தைப் பற்றி அறிந்தேன். ஆண்டவர் என் வாழ்க்கையில் இன்னும் ஒரு அற்புதத்தைச் செய்ய முடியும் என்று நம்பி, விசுவாசத்துடன் நான் குடும்ப ஆசீர்வாத திட்டத்தில் இணைந்தேன். ஆண்டவர் என் வாழ்வில் அற்புதம் செய்தார். அவர் எனக்கு ஒரு அழகான குழந்தையை கொடுத்து ஆசீர்வதித்து, எங்கள் வீட்டை மகிழ்ச்சியால் நிரப்பினார். பல வருடங்களுக்குப் பிறகு, நான் இன்னொரு சவாலை எதிர்கொண்டேன். எனது அறுவை சிகிச்சைக்கு ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, அறுவை சிகிச்சை செய்த இடத்திற்கு அருகில் சீழ் வருவதை கவனித்தேன். பயம் என்னை ஆட்கொண்டது. ஆனால் நான் மீண்டும் ஆண்டவர் மீது நம்பிக்கை வைக்கத் தொடங்கினேன். ஒவ்வொரு நாளும், இயேசு அழைக்கிறார் காலண்டரில் உள்ள வாக்குத்தத்த வசனங்களினாலும், இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்தில் செய்யப்படும் ஆறுதல் தரும் ஜெபங்களினாலும் நான் பலப்படுத்தப்பட்டேன். ஆண்டவர் உண்மையுள்ளவர். அவர் என்னை முழுமையாக குணமாக்கினார். ஒரு காலக்கட்டத்தில் மிகுந்த பயத்தை ஏற்படுத்திய பிரச்சனை இப்போது மறைந்துவிட்டது. இன்று நானும் என் குடும்பத்தினரும் ஆண்டவருடைய மிகுந்த ஆசீர்வாதத்தோடு வாழ்ந்து வருகிறோம். நான் பெற்ற சுகம், நம்பிக்கை மற்றும் அன்பிற்கு எப்பொழுதும் மிகுந்த நன்றியுள்ளவளாக இருக்கிறேன். குடும்ப ஆசீர்வாத திட்டத்தின் மூலம் ஆண்டவர் நம் ஜெபங்களைக் கேட்டு, பதிலளித்து, மீட்டெடுக்கிறார் என்பதை நான் நேரடியாக அனுபவித்தேன்.
வரவிருக்கும் பிரார்த்தனை கூட்டங்கள்
Feb ' 26
01
Sunday
Students Prayer Meet 2026
From : 01-02-26 02:00 PM
To : 01-02-26 05:00 PM
Wings Convention Center @ St. George's School Ground Poonamallee High Road, Near Pachaiyappa's College Metro Station, Chennai - 30.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now






































