- தேவன் உங்களை தேவனுடைய ஆலயமாக மீண்டும் கட்டி எழுப்புவார்; பரிசுத்தமும் தேவனுக்கு ஏற்றதுமானவர்களாக ஆக்குவார். (1 கொரிந்தியர் 6:16,19; ரோமர் 12:1,2)
- தேவன் உங்கள் வீட்டையும் குடும்பத்தையும் மீண்டும் கட்டி எழுப்புவார்; இரட்சிப்பு மற்றும் நல்ல உறவுகளை அளிப்பார். (1 கொரிந்தியர் 7:14; அப்போஸ்தலர் 14:31)
- தேவன் உங்கள் நாமத்தையும், நிலையும், மதிப்பும், உடமைகளையும் மீண்டும் உயர்த்துவார். (எரேமியா 31:4)
- தேவன் தமது பரிசுத்த ஆவியை உங்கள்மேலும் உங்கள் குடும்பத்தின்மேலும் ஊற்றுவார். (அப்போஸ்தலர் 2:17)
- கர்த்தருக்கு ஊழியம் செய்யும் உங்களுக்குத் தேவன் தமது தீர்க்கதரிசன கிருபையை அளித்து, பரிசுத்த ஆவியின் வரங்களையும் கனிகளையும் செயல்படுத்துவார்; அதனால் கிறிஸ்துவின் இயல்பை வெளிப்படுத்தும் அற்புதங்கள் நிகழும். (1 கொரிந்தியர் 3:18)
- தேவன் தமது தீர்க்கதரிசன கிருபையை கீழ்கண்டவர்களின் வழியாக வெளிப்படுத்துவார்: ஆசிரியர்கள்; ஊடகங்களில் பேசுவோர் மற்றும் பாடுவோர்; ஏழைகளுக்கும் தேவையுள்ளவர்களுக்கும் சேவை செய்பவர்கள்; வியாபாரத்தில் இருப்போர் மற்றும் தொழில் முனைவோர்; மருத்துவர்கள், பொறியாளர்கள்; மக்களின் உரிமைகளை நிறுவும் வழக்கறிஞர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள்; சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்பவர்கள்.
- கிறிஸ்துவின் நாமத்தை ஏந்திய அனைவரிடமும் ஒரே மனமும் ஒரே நோக்கமும் உண்டாகும்படியாக தேவன் ஏற்படுத்துவார்; தேவனுடைய பணியாளர்கள் அனைவருக்கும் இடையில் நல்லதும் இனியதுமான உறவுகள் நிலவும்.
- கர்த்தராகிய இயேசுவின் உடலாக ஒன்றுபட அனைத்து திருச்சபைகளும் சேரும்போது, தேவன் தமது பரிசுத்த ஆவியை எல்லா திருச்சபைகளின்மேலும் ஊற்றுவார்.
- ஒவ்வொரு ஊழியத்தின்மேலும் தேவன் ஆசீர்வாதத்தை கட்டளையிட்டு, மக்கள், வளங்கள் மற்றும் சமாதானத்துடன் செழிக்கச் செய்வார்.
- தேவன் தமது ஊழியக்காரர்களுக்கு தெய்வீக பாதுகாப்பை அளிப்பார்.
- மீண்டும் ஒருமுறை தேசமெங்கும் சுவிசேஷத்தை அறிவிக்க தேவன் கதவுகளைத் திறப்பார்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now

