எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம் ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் வல்ல நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்று, "உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக" (ரூத் 2:12) என்ற வசனத்தைத் தியானிப்போம்.
மோவாபிய பெண்ணான ரூத், அவர்கள் வழியில், மோவாபியரின் தெய்வத்தை பின்பற்றும்விதத்தில் வளர்க்கப்பட்டிருப்பாள். ஆயினும், இஸ்ரவேல் குடும்பத்தில் திருமணம் நடந்தபின், தன் மாமியாராகிய நகோமியை என்னும் விசுவாச பெண்மணியை சந்தித்தாள். நகோமி, தேவனுக்குரிய பெண்மணியாய், அவரது வழிகளில் பக்திக்கேதுவானவிதத்தில் நடக்கிறவளாக இருந்தாள். அவள், தன் மருமக்களை அதிகமாய் நேசித்தாள். ரூத், அந்த அன்பினால் அதிகமாய் ஈர்க்கப்பட்டாள். நகோமியின் விசுவாசத்தினாலும் பக்தியினாலும் ரூத்தும் இஸ்ரவேலின் தேவனை பின்பற்ற ஆரம்பித்தாள். அந்த நேரத்தில் அவர்கள் நிலை மிகவும் மோசமாக இருந்தது. சாப்பிடுவதற்கு ஒன்றுமில்லாமல் மிகவும் ஏழ்மையில் இருந்தார்கள். தங்கள் தத்தளிப்பின் நடுவிலும் ரூத், உண்மையாய் கர்த்தரைத் தேடினாள்; நகோமியுடன் விசுவாசத்தில் உறுதியாக நின்றாள். கர்த்தருக்கு அவள் இருதயம் மிகவும் பிரியமானதாகக் கண்டது. ஆம், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த அவளுக்கு அவராலே நிறைவான பலன் கிடைத்தது (ரூத் 2:12).
அன்பானவர்களே, உங்களைக் குறித்து என்ன? இஸ்ரவேலின் தேவனை உங்கள் வாழ்வில் ஏற்றுக்கொண்டிருக்கிறீர்களா? அவர் உங்கள் இரட்சகராக இருக்கிறாரா? ரூத், மோவாபிய பெண்ணாக இருந்தாலும் கர்த்தரை முழு மனதுடன் தேடினாள்; அவளது விசுவாசத்தினால் பரிபூரண ஆசீர்வாதம் பெற்றாள். தேவன், செல்வந்தனான போவாஸுக்கு அவளை மனைவியாகச் செய்து அவளை ஏழ்மையிலிருந்து உயர்த்தினார். ஒன்றுமே இல்லாதவளாயிருந்த அவளுக்கு எல்லாமும் கொடுக்கப்பட்டது. அவள் வாழ்க்கை மறுரூபமாக்கப்பட்டது. இன்று நீங்களும் வெறுமையாய், எல்லாவற்றையும் இழந்துபோனதாய், ஆசீர்வாதமே இல்லாத நிலையில், "சமாதானம், சந்தோஷம், நம்பிக்கை எதுவுமே எனக்கு இல்லை," என்று அழுதுகொண்டிருக்கலாம். இஸ்ரவேலின் தேவனின் அடைக்கலத்தின் கீழ் வாருங்கள். அவர், "என்னண்டை வா. நான் உன்னை ஆசீர்வதிப்பேன்," என்று அன்போடு அழைக்கிறார். ரூத்தை ஆசீர்வதித்த அதே தேவன் உங்களையும் ஆசீர்வதிப்பார். ஒன்றுமே இல்லாத உங்களுக்கு அவரால் எல்லாற்றையும் கொடுக்க முடியும். அப்படியே அவர் வாக்குக்கொடுக்கிறார்.
வேதத்தில், "கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்" (நீதிமொழிகள் 10:22) என்று வாசிக்கிறவண்ணம் செய்வார். அன்பானவர்களே, இஸ்ரவேலின் தேவனை நீங்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறீர்களா? சிலுவையில் அவர் உங்களுக்காக ஜீவனையே கொடுத்தார். இன்று சிலுவையண்டை வாருங்கள். இயேசுவை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ளுங்கள். அவர் உங்களுக்கு புதிய இருதயத்தையும் புதிய ஜீவனையும் அருளுவார்.
PRAYER:
பரம தகப்பனே, நன்றியுள்ள இருதயத்துடன் உம் முன்னே வருகிறேன். உம் செட்டைகளின் அடைக்கலத்திற்கும் உம் அன்புக்கும் கீழே இருக்கும்படி என்னை அழைப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ரூத்தை ஆசீர்வதித்தபடியே, என் வாழ்க்கையையும் மறுரூபமாக்குவீர் என்று நம்புகிறேன். நான் வெறுமையாக உணரும்போது, நீரே எனக்கு வேண்டியவற்றை அருளுகிறவர் என்பதை நினைப்பூட்டுவீராக. ரூத்தைப்போல உம்மை உண்மையாய் தேடுவதற்கு உதவி செய்யும். ஆண்டவரே, என் கவலைகளையும் பாரங்களையும் உம் பலத்த கரங்களில் அர்ப்பணிக்கிறேன். உம் ஆசீர்வாதங்கள் என் வாழ்வில் புரண்டோடி சந்தோஷத்தையும் பரிபூரணத்தையும் அளிப்பதாக. உம் சிலுவைக்காய், உம் அன்புக்காய், உம் நித்திய கிருபைக்காய் ஸ்தோத்திரிக்கிறேன். இயேசுவே உம் என் ஆண்டவராக, என் இரட்சகராக ஏற்றுக்கொண்டு, நீரே புதுஜீவனை அளிப்பீர் என்று நம்புகிறேன். இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


