2026 எழுந்து கட்டும் ஆண்டாகும். ஆண்டவர், வரும் ஆண்டில் தம் மக்களுக்கு சீர்ப்படுத்தல், ஒற்றுமை, பரிசுத்த ஆவியின் புதிய அபிஷேகம் ஆகியவற்றை அறிவித்து Dr. பால் தினகரனுக்கு தம் வாக்குத்தத்தங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

2026ம் ஆண்டுக்கான வாக்குத்தத்தங்கள்:

1. தேவன் உங்களை தேவனுடைய ஆலயமாக, பரிசுத்தமும், தேவனுக்கு உகந்தவருமாக திரும்பக் கட்டுவார் (1 கொரிந்தியர் 6:16,19; ரோமர் 12:1,2).
2. தேவன் உங்கள் வீட்டுக்கு, குடும்பத்துக்கு, இரட்சிப்பையும் உறவுகளுக்குள் சமாதானத்தையும் அளித்து திரும்பக் கட்டுவார் (1 கொரிந்தியர் 7:14; அப்போஸ்தலர் 16:31)
3. தேவன் உங்கள் பெயரை, பதவியை, அந்தஸ்தை, ஆஸ்திகளை திரும்பக் கட்டுவார் (எரேமியா 31:4)
4. தேவன், உங்கள்மேலும் உங்கள் குடும்பத்தார்மேலும் தமது பரிசுத்த ஆவியை அருளிச்செய்வார் (அப்போஸ்தலர் 2:17)
5. தேவன் தம் தீர்க்கதரிசன கிருபையை உங்கள்மேல் வைத்து, பரிசுத்த ஆவியின் வரங்களிலும் கனியிலும் நீங்கள் செயல்பட்டு ஆண்டவருக்கு ஊழியம் செய்யும்படி, அற்புதங்களை நடப்பிப்பார்; கிறிஸ்துவின் சாயலை வெளிப்படுத்துவார்; உன்னதங்களில் நடக்கப்பண்ணுவார் (2 கொரிந்தியர் 3:18).
6. தேவன், போதகர்கள், மீடியா பிரசங்கியார்கள் மற்றும் பாடகர்கள், சிறுமைப்பட்டவர்களுக்கும் தேவையிலுள்ளவர்களுக்கும் சேவை செய்கிறவர்கள், வணிகம் செய்கிறவர்கள், தொழில்முனைவோர், மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞராக, செயல்பாட்டாளராக மக்களின் உரிமைகளை நிலைநிறுத்துகிறவர்கள், விதிமுறைகள், ஒழுங்குகளை நடைமுறைப்படுத்துகிறவர்கள் மூலமாக தம் தீர்க்கதரிசன கிருபையை அளிப்பார் (வெளிப்படுத்தல் 10:11).
7. தேவன், கிறிஸ்துவின் நாமத்தை சுமக்கிற எல்லார் மத்தியிலும் ஒருமனதையும் நோக்கத்தையும் உருவாக்குவதோடு, தேவனுடைய ஊழியர்கள் இடையிலும் மத்தியிலும் நன்மையும் பிரியமுமான உறவினை ஏற்படுத்துவார்.
8. தேவன், அனைத்து திருச்சபைகளும், ஆண்டவர் இயேசுவின் சரீரமாக ஒருமித்து வருமாறு தம் பரிசுத்த ஆவியை ஊற்றுவார்.
9. தேவன், ஒவ்வொரு ஊழியங்களும் அநேக மக்கள், அநேக அருட்கொடைகள், பரிபூரண சமாதானத்துடன் செழிக்கும்படியான ஆசீர்வாதத்தை கட்டளையிடுவார்.
10. தேவன், தம் ஊழியர்களுக்கு தெய்வீக பாதுகாப்பை வழங்குவார்.
11. தேவன், தேசமெங்கும் இன்னொரு முறை சுவிசேஷத்தை பிரசங்கிக்கும்படி வாசல்களை திறப்பார்