அன்பானவர்களே, இன்றைக்கு, “என் வாசஸ்தலம் அவர்களிடத்தில் இருக்கும், நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்” (எசேக்கியேல் 37:27) என்று கர்த்தர் கூறும் வசனத்தை தியானிப்போம். மற்றொரு மொழிபெயர்ப்பில், “என் உறைவிடம் அவர்கள் நடுவே இருக்கும்; நான் அவர்களுக்கு தேவனாயிருப்பேன்; அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்.” இது, எவ்வளவு அருமையான காரியம்! தேவன் நம்மோடுகூட தங்க விரும்புகிறார். பழைய ஏற்பாட்டு காலத்தில், இஸ்ரவேலர்கள் தேவனின் பிரசன்னம் தங்குவதற்கு ஒரு கூடாரத்தை அமைத்திருந்தனர். அந்த கூடாரத்தில்தான் அவர்கள் தேவனோடு உறவு கொண்டிருந்தனர். தேவன் அவர்கள் நடுவே உலாவிக்கொண்டிருந்தார். அந்த கூடாரத்தில் தான் தேவன் வசித்தார்.

அது போலவே, இன்றும் கர்த்தர் நம்மை தம்முடைய வாசஸ்தலமாக மாற்றுகிறார். 1 கொரிந்தியர் 6:19-ல், “உங்கள் சரீரமானது, நீங்கள் தேவனாலே பெற்றும், உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியானவருடைய ஆலயமாயிருக்கிறீர்கள். “உங்களை நீங்களே நம்புங்கள்” என்று உலகம் கூறுகிறது.  ஆனால், நம்மை நாமே நம்ப முடியாது என்பதை நாம் அறிவோம். நாம் தேவனுடைய பிள்ளைகள். நாம் அவருக்குச் சொந்தமானவர்கள். நம்மை நாமே அலட்சியப்படுத்த முடியாது. ஏனெனில், தேவன் நம்மில் வாசமாயிருக்கிறார். நம் சரீரம் பரிசுத்த ஆவியின் ஆலயம். இந்த உலகத்தின் பாவமான காரியங்களைத் தொட முடியாது. நாம் தனித்து நிற்க வேண்டும். நம்மைப் பரிசுத்தமாக வைத்திருக்கும்போதுதான், தேவன் நம்மில் மகிழ்ச்சியடைகிறார், நமக்குள் வாசம் செய்வார். வேதத்தில், “தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே” (ஆபகூக் 1:13) என்று பார்க்கிறோம்.  அப்படியானால், பரிசுத்தமாய் வாழ நாம் எவ்வளவு அதிகமாக பாடுபட வேண்டும்?

பரிசுத்தமாக இருக்க, நாம் விசுவாசிகளுடன் சேர்ந்து, ஜெப ஐக்கியங்களில் ஈடுபட வேண்டும். அதற்காகதான் உங்களை ஜெப கோபுர ஊழியத்தின் ஒரு பகுதியாக இருக்க அழைக்கிறோம். நாம் உலகில் வாழ்ந்து, நம்பிக்கையற்ற சூழ்நிலையிலிருந்தாலும், உலக வாழ்க்கை நம்மை மாற்றகூடும். எனவே, நாம் தேவ பிள்ளைகளோடு எப்பொழுதும் ஐக்கியம் கொண்டிருக்க வேண்டும். உங்கள் நேரத்தை, பணத்தை, குடும்பத்தை தேவனுக்கு கொடுத்து, தேவனுடைய காரியங்களில் அதிகமாய் ஈடுபடுங்கள். இப்படித்தான் எங்கள் குடும்பத்தை கர்த்தர் தூய்மையாக வைத்திருக்கிறார். என் கணவர் தன்னை மட்டும் அல்ல, எங்கள் முழு குடும்பத்தையும் ஊழியத்தில் ஈடுப்படுத்தி, பரிசுத்தமாக வாழவும், ஒன்றாக இருக்கவும் செய்கிறார். ஆம், நமக்குள் தவறான புரிதல்கள் உள்ளன. ஆனால், நாம் ஜெபத்தில் ஒன்று சேரும்போது, பரிசுத்த ஆவியானவர் அனைத்து தவறான புரிதல்களையும் நீக்கி, அன்பில் நம்மை ஒன்றிணைக்கிறார். எனவே, விசுவாசிகளுடனும், ஜெப வீரர்களுடனும், ஜெப கூட்டங்களிலும் ஐக்கியப்படுங்கள். உங்கள் சரீரங்களை தேவனுக்கு கொடுத்து, அவருக்காக வாழ உங்கள் வாழ்க்கையை அர்ப்பணியுங்கள். இயேசு சீக்கிரமாய் வருகிறார். ஆகவே, நாம் இன்னும் பரிசுத்தமாக, நீதியுள்ளவர்களாக மாறுவோம். “"பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதி செய்யட்டும்." அவர் சீக்கிரமாய் வருகிறார். அன்பானவர்களே, காத்திருங்கள். உங்கள் சரீரங்களை தேவன் வாழும் ஒரு இருப்பிடமாக மாற்றுங்கள். இன்று உங்கள் வாழ்க்கையை தேவனுக்கு அர்ப்பணிப்பீர்களா?

ஜெபம்:
அன்புள்ள பரலோகத் தகப்பனே, என் இருதயத்தை உமது வீடாக மாற்றியதற்காக உமக்கு நன்றி கூறுகிறேன். அதுபோல, என் சரீரத்தையும் பரிசுத்த வாசஸ்தலமாகவும், தூய்மையாகவும், உமக்குப் பிரியமாகவும் மாற்றுவீராக. அசுத்தமானதைத் தொட்டதற்காக என்னை மன்னியும்; உமது ஆவியால் என்னை பரிசுத்தப்படுத்தும். உலக வாழ்க்கையிலிருந்து என்னை பிரித்து, பரிசுத்தத்தில் நடக்க எனக்கு உதவி செய்யும். உம்முடைய ஊழியர்கள் எப்பொழுதும் என்னைச்  சூழ்ந்திருக்கவும், உமது நாமத்தை மகிமைப்படுத்தவும் கிருபைபுரிவீராக. நான் உமக்கு முன்பாக தகுதியானவனாக காணப்பட,  உம்முடைய வருகைக்கு என்னை ஆயத்தபடுத்தும். நான் என் வாழ்க்கையின் அனைத்தையும்  உமக்கு அர்ப்பணிக்கிறேன். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.