அன்பானவர்களே, இன்றைக்கு, "வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன்" (யோவேல் 2:25) என்ற வசனத்தை தியானிப்போம். வெட்டுக்கிளிகள் என்ன செய்யும்? அவை செடிகள், தண்டுகள், கிளைகள், பூக்கள் எல்லாவற்றையும் தின்றுபோடும். ஒன்றும் மீதம் இருக்காது. அவை ஓய்வில்லாமல் அழித்துப்போடுகிறவை. அவ்வாறே, உங்கள் வாழ்க்கையிலும் எல்லாம் பட்சிக்கப்பட்டுபோனது என்று நீங்கள் நினைக்கலாம். ஒரு பிரச்னையல்ல; பல பிரச்னைகள் இருக்கலாம். உங்கள் பொருளாதாரம், உடல்நலம், வேலை, குடும்ப சமாதானம் எல்லாவற்றையும் இழந்துபோனதுபோல் உணரலாம். எல்லா கதவுகளும் அடைக்கப்பட்டதுபோல, சந்தோஷமாய் அனுபவிப்பதற்கு ஒன்றும் இல்லாததுபோல காணப்படலாம்.

ஆனால், அன்பானவர்களே, தேவன் உங்களுக்கானவற்றை செய்து முடித்திடவில்லை. உங்களிடமிருந்து எடுக்கப்பட்ட எல்லாவற்றையும் திரும்ப அளிப்பதாகக் கூறுகிறார். "ஏன் பதிலுக்கு ஒன்றை அளிக்காமல் திரும்ப அளிக்கவேண்டும்?" என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். தேவன் திரும்ப தரும்போது, அவர் இழந்தவற்றை இரட்டிப்பாய் அளிக்கிறார். குடும்பம், உடல் நலம், ஆஸ்தி, கௌரவம் எல்லாவற்றையும் இழந்து சாம்பலில் உட்கார்ந்திருந்த யோபுவைப்போல ஒருபோதும் தேவனை விட்டுவிடாதிருங்கள். அவனுக்கு முன்பிருந்தவற்றைப் போல இரட்டிப்பானவற்றை தேவன் கொடுத்தார். அவனது பிந்தின நாட்கள், தொடக்கத்தைக் காட்டிலும் சிறந்தவையாய் இருந்தன. அப்படிப்பட்ட மீட்பை தேவன் உங்களுக்கு வாக்குப்பண்ணுகிறார்.

ஆகவே, இப்போதும் விட்டுவிடாதிருங்கள். இத்தனை ஆண்டுகள் வீணாய்ப்போனதாக நீங்கள் உணருகிறவற்றை, நீங்கள் இழந்த எல்லா சமாதானத்தையும், மரியாதையையும், நொறுங்கிப்போன நம்பிக்கையையும், தேவன் இரட்டிப்பாய் மீட்டுத் தருவார். அவர் உடைந்துபோன பகுதிகளை சீர்ப்படுத்துவது மட்டுமல்லாமல், உங்கள் வாழ்க்கையில் நன்மையும் புரண்டு வரச்செய்வார். இந்தக் காலத்திலே ஆண்டவரைப் பற்றிக்கொள்ளுங்கள். அவர் உங்களைத் திரும்ப சேர்த்துக்கொள்வார் என்று விசுவாசித்திடுங்கள். அவர் உங்களை உயர்த்துவார்; வெற்றியை தந்திடுவார்; வெட்டுக்கிளிகள் பட்சித்த ஆண்டுகளை திரும்ப அளிப்பார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் எனக்கு இரட்டிப்பாக திரும்ப தருவதாக அளித்துள்ள வாக்குத்தத்தத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம் இரக்கத்திற்காக உம்மை துதிக்கிறேன். நான் இழப்புகளின் காலத்தின் வழியாக கடந்துசென்றாலும், எனக்கு ஒத்தாசை அளிக்கும் உம்மை நோக்கிப் பார்க்கவும், இந்த வாக்குத்தத்தத்தைப் (யோவேல் 2:25) பற்றிக் கொள்ளவும் தீர்மானிக்கிறேன். நீர் பதிலுக்கு ஒன்றை அளிக்கிறவராயிராமல், திரும்ப அளிக்கிற தேவனாய் இருக்கிறீர். அதுவும் இரட்டிப்பாய் திரும்ப அளிக்கிறீர். நீர் யோபுவை உயர்த்தியவண்ணமே, என்னை உயர்த்துவீர் என்று விசுவாசிக்கிறேன். ஆண்டவரே, என் விசுவாசத்தை பெலப்படுத்தும். உம்மை விட்டு ஒருபோதும் போகாதிருக்க உதவும். நீர் திரும்ப அளிப்பதை, உம் ஆரோக்கியத்தை, உம் அற்புதத்தை இன்று பெற்றுக்கொள்கிறேன். என் வாழ்வில் சிறந்தவை இனிமேல்தான் வரும் என்று விசுவாசித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.