அன்பானவர்களே, இன்றைக்கு ஆண்டவர் உங்களுக்குப் புதிய வாழ்க்கையைத் தருகிறார். நாள்தோறும் அவர் நம்மை தமக்குள் புதிதாக சிருஷ்டிக்கிறார்; புதிய ஆசீர்வாதத்தை தருகிறார். வேதம், "கர்த்தர் நீதியுள்ளவர், நீதியின்மேல் பிரியப்படுவார்; அவருடைய முகம் செம்மையானவனை நோக்கியிருக்கிறது" (சங்கீதம் 11:7) என்று சொல்லுகிறபடி, அவரிடமிருந்து புதிய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளப் போகிறோம். ஆம், ஆண்டவர் தம் நீதிமான்களுக்கு நியாயம் செய்ய விரும்புகிறார். இந்த வசனம், செம்மையானவர்கள்தேவனுடைய முகத்தை தரிசிப்பார்கள் என்று அழகாக கூறுகிறது. ஆகவே, கவலைப்படாதீர்கள்.
என்னுடைய பாட்டியும் தாத்தாவும் அவர்களுக்குத் திருமணம் நடந்த தொடக்கக் காலத்தில், தங்கள் முதல் இரண்டு குழந்தைகளையும் இழந்தனர். ஒரு குழந்தை இறந்தே பிறந்தது. இன்னொரு குழந்தை பிழைக்கவில்லை. அந்த நேரத்தில் மிகவும் மனமுடைந்த அவர்கள், மிகுந்த கடினமான பாதை வழியாக கடந்து சென்றனர். ஆனாலும், அவர்கள், "ஆண்டவரே, உமக்கே நாங்கள் ஊழியம் செய்வோம். உம்மையே பின்பற்றுவோம்," என்று கூறினார்கள்; ஆண்டவர் வழி நடத்தியபடி ஊழியத்தை செய்தார்கள். அவர்களுடைய நீதியின் தீர்மானத்தை தேவன் கனப்படுத்தினார். அவர்கள் வாழ்க்கையில் சிறந்த ஆசீர்வாதத்தை தேவன் வைத்தார். தம் நீதியை அவர்கள் வாழ்வில் சேர்த்துக்கொண்டே இருந்தார். அவர்களுக்கு இன்னும் இரண்டு அழகிய பிள்ளைகளைக் கொடுத்தார். அவர்கள் மகனாகிய எங்கள் தந்தை Dr. பால் தினகரன் மூலமாக அவர்களைப் பெருகப்பண்ணி, பேரப்பிள்ளைகளாகிய எங்கள் மூவரையும் கொடுத்தார். இன்று என் பாட்டி மேலும் மூன்று தலைமுறையை கண்டு பூட்டியாகி இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், தேவன் அவர்களுக்கு இயேசு அழைக்கிறார், காருண்யா, சீஷா மூலமாக அநேக ஆவிக்குரிய பிள்ளைகளைக் கொடுத்திருக்கிறார்.
அவர்கள் கடந்த சென்றவற்றுக்கும் அவர்கள் இழந்தவற்றும் பன்மடங்கு அதிகமாக தேவன் நீதி செய்தார். அன்பானவர்களே, இன்று உங்களுக்கும் அப்படியே செய்வார். என் தாத்தாவுக்கு அவரது முகத்தை தரிசிக்கும் விசேஷித்த கிருபையையும தேவன் கொடுத்தார். உங்கள் வாழ்க்கையின் எல்லா பகுதிகளிலும் உங்களை தம்மையும், தம் நன்மையையும், தமது சந்தோஷத்தையும், தம் பலனையும், தம் நீதியையும் காணும்படி செய்வார். அன்பானவர்களே, அது வந்து கொண்டிருக்கிறது. நாம் அதைப் பெற்றுக்கொள்வோமா?
ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, இன்றைக்கு நீர் அளித்துள்ள வாக்குத்தத்தத்தின்படி, நீர் நீதியை விரும்புறவர்; நியாயஞ்செய்கிறவர். நான் இன்னும் உம்மை பின்பற்ற விரும்புகிறதால், என் வாழ்க்கையில் அநேக முறை ஏற்பட்ட இழப்புகளுக்கெல்லாம் நீர் பதில் செய்வீர் என்று விசுவாசிக்கிறேன். ஆண்டவரே, என் விசுவாசத்தை கனப்படுத்தும். நேர்மையான என் தீர்மானத்தை கனப்படுத்தும். எனக்கு பன்மடங்கு பலன்களை தந்திடும். பலமுறை எனக்கு ஆசீர்வாதத்தை அளித்திடும். நான் இழந்தவற்றையெல்லாம் மீண்டும் தந்திடும். ஆண்டவரே, இரட்டிப்பாய் தந்து என் வாழ்க்கையில் ஓர் அற்புதத்தைச் செய்திடும். என் வாழ்க்கையை மறுபடியும் கட்டியெழுப்பிடும். நான் பெரிய உயரங்களுக்கு வளரும்படி செய்யும். என் தேசமும், எனக்குரியவை எல்லாமும் வளரட்டும். உம்மிடமிருந்து கிடைத்த ஆசீர்வாதமாக அத்தனையும் இயற்கைக்கு அப்பாற்பட்டவிதத்தில் நடக்கட்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


