வேதம், "என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்" (மல்கியா 4:2) என்று கூறுகிறது. இயேசுவே, நீதியின் சூரியனாயிருக்கிறார். ஆம், நீதி வரும்போது, ஆரோக்கியமும் வருகிறது. தேவன், உங்கள் வாழ்க்கையில் நீதியையும் ஆரோக்கியத்தையும் கொண்டு வர விரும்புகிறார். இன்றைக்கு, உங்கள் வாழ்க்கையை இயேசுவின் கரங்களில் ஒப்படைத்து, "ஆண்டவரே, என்னை சுத்திகரியும். என் வாழ்க்கையில் ஏதேனும் தவறாக இருந்தால், தயவாய் என்னை மன்னித்து, நீதியில் நடப்பதற்கு உதவும்," என்று கூறுங்கள். அப்போதுதான் வாழ்க்கையில் ஆரோக்கியம் காணப்படும். நீங்கள் இழந்தவை எல்லாம் திரும்ப அளிக்கப்படும். பிசாசுகளும் துன்மார்க்கரும் ஒருபோதும் உங்களைத் தொடமுடியாது. ஆகவே, நீதிக்குத் திரும்புவோம்.
இரண்டாவதாக, பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கவேண்டும்; துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளவேண்டும்; வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கவேண்டும். அப்பொழுது விடியற்கால வெளுப்பைப்போல நம் வெளிச்சம் எழும்பி, நம் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து, நம் நீதி நமக்கு முன்னாலே செல்லும் என்று வேதம் கூறுகிறது (ஏசாயா 58:7,8). தேவன் நம்மை பரிசுத்தமாக காத்துக்கொள்வார். இயேசுவின் நீதியின் ஆவி நம்மேல் வரும். ஆகவேதான், இயேசு அழைக்கிறாரில் சீஷாவை வைத்திருக்கிறோம். வாழ்க்கைக்கான தேவையுள்ள மக்களுக்காக ஒருநாளில் இருபத்து நான்கு மணி நேரமும் ஜெபிக்கிறோம். இயேசு, "நீங்கள் இருவர் ஒருமனப்பட்டால், பரலோகத்தில் நான் அதைச் செய்வேன்," என்று கூறியிருக்கிறார். ஆகவேதான் தேவையுள்ள மக்களுடன் 24 மணி நேரமும் ஜெபிக்கிறோம். ஆடைகள், வீடுகள், கல்வி இல்லாத ஏழை மக்கள்மேல் கரிசனையாயிருக்கிறோம். தேவன், ஊழியத்தையும் எங்கள் பெயரையும் பாதுகாத்திருக்கிறார். நீங்கள் சீஷாவில், இயேசு அழைக்கிறாரில் பங்களாராகி, சேவை செய்து, ஜெபித்து, இந்த அருட்பணி தேவைகளைச் சந்திப்பதற்குக் கொடுக்கும்போது, தேவனுடைய நீதி உங்கள்மேல் வரும். அவர் உங்கள் பெயரை காத்து, தம் திட்டத்தின்படி உங்களை வழிநடத்தி, மனுஷருடைய கண்களிலும் தேவனுடைய கண்களிலும் உங்களுக்கு தயவு கிடைக்கும்படி செய்து, பொல்லாதவர்களின், பிசாசின் தாக்குதல்களிலுமிருந்து உங்களைப் பாதுகாப்பார்.
தேவனுடைய மக்களுக்கு நாம் சேவை செய்யும்போது, நீதியில் நடப்பதற்கான கிருபையை தேவன் நமக்குத் தந்திடுவார். இயேசு, முடிவுபரியந்தம் தம் சீஷர்கள்மேல் அன்புகூர்ந்தார் என்று வேதம் கூறுகிறது (யோவான் 13:1,2). அவர் ஒரு சீலையை எடுத்து, தன் அரையில் கட்டிக்கொண்டு, பணிவிடைக்காரன்போல் அவர்கள் கால்களைக் கழுவினார். அவர்கள், "ஆண்டவரே, நாங்கள்தான் உம் கால்களைக் கழுவவேண்டும்," என்று கூறினாலும், இயேசு, "என் மாதிரியைப் பின்பற்றுங்கள்," என்று கூறினார். தன்னை காட்டிக் கொடுத்தவனின் காலையும் அவர் கழுவினார். அவர் அவனிடம் அன்பு காட்டினார்; அந்த அன்பு அவனால் தாங்கக்கூடாததாயிருந்தது. இயேசு, தம் சீஷர்பேரில் கரிசனை காட்டி அவர்களைப் போஷித்தார். அவர், அவர்களுக்காக சமைக்கவும் செய்தார் என்று வேதம் கூறுகிறது (யோவான் 21:5-9). நீங்கள் தேவனுடைய பிள்ளையா? தேவனுடைய ஊழியரா? அவர், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் உணவு கொடுப்பார். ஊழியத்தின் அனைத்துத் தேவைகளையும் அருளிச்செய்வார். தேவனுடைய ஊழியரான நீங்கள் தேவனுடைய மற்ற ஊழியர்பேரிலும் அக்கறை காட்டுங்கள். அவர்கள் கால்களைக் கழுவுங்கள்; தேவைகளைச் சந்தித்திடுங்கள்; கர்த்தர், உலகம் முழுவதும் உங்கள் நீதியை பிரகாசிக்கப்பண்ணுவார். இந்தக் கிருபையை தேவன்தாமே தருவாராக.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நீர் நீதியின் சூரியனாயிருக்கிறீர். என் தவறுகளையெல்லாம் மன்னித்து, உம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தால் என் வாழ்க்கையைக் கழுவும். நீதியில் நடக்கவும் உம்மிடமிருந்து சுகத்தைப் பெற்றுக்கொள்ளவும் எனக்கு உதவிடும். உம் ஊழியர்கள்பேரில் கரிசனை காட்டவும், மற்றவர்களிடம் என்னைப்போல் அக்கறை காட்டவும் எனக்குக் கற்றுக்கொடுத்தருளும். நீதியின் ஆவியால் என்னை நிரப்பிடும். என் பெயரையும் ஜீவனையும் பாதுகாத்துக்கொள்ளும். உம் வெளிச்சம் என் மூலம் பிரகாசிக்கவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


