என் பிள்ளை எதிர்காலத்தில் நன்றாக வாழ்வதற்கு நான் என்ன செய்யலாம்?
தான் அதிகம் படிக்காததால் மகள் கீர்த்தியை எப்படியாவது படிக்க வைக்கவேண்டும் என்ற ஆசை அம்மா பிந்துவுக்கு இருந்து வந்தது. ஆனால், பிள்ளை எவ்வளவுதான் முயற்சித்தாலும் அவளால் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் வாங்க இயலவில்லை.
அது மட்டுமல்ல, படிப்பைக் குறித்தும் மற்ற பொதுவான விஷயங்களிலும் கீர்த்தி அதிகம் பயந்தாள். அடுத்த ஆண்டு பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுத இருந்ததால் மகளைக் குறித்த கவலை அம்மா பிந்துவுக்கு அதிகமானது.
பல்வேறு நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் பார்க்கும்போது, 'இயேசு அழைக்கிறார்' நிகழ்ச்சியைக் குறித்தும் பிந்து அறிந்துகொண்டார்கள். அதில் பேசப்படும் வார்த்தைகள் மனதுக்கு மிகுந்த ஆறுதலையும் தைரியத்தை அளித்தன. அந்த நிகழ்ச்சியில், படிக்கும் பிள்ளைகளின் ஞானத்திற்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்வதாக கூறப்பட்டது.
அப்போது சென்னையில் இருந்த பிந்து, தொலைக்காட்சியில் காட்டப்பட்ட முகவரியிலுள்ள ஜெப கோபுரத்திற்குச் சென்றார்கள். படிக்கும் பிள்ளைகளுக்கான பிரார்த்தனையை குறித்து விசாரித்தபோது, இளம் பங்காளர் என்ற திட்டம் இருப்பதாக ஜெப கோபுரத்தில் கூறினார்கள். அதில் பெயர் சேர்க்கப்படும் பிள்ளைகளுக்கு கடவுள், ஞானத்தை அளித்து, பாதுகாத்து, வாழ்வில் உயர்த்தும்படி தினமும் பிரார்த்திப்பதாகவும் கூறினார்கள். பிந்து, தன் மகள் கீர்த்தியை இளம் பங்காளர் திட்டத்தில் சேர்த்தார்கள்.
அதன் பின்னர் மகளின் நடத்தை மற்றும் படிப்பில் மாற்றம் ஏற்படுவதை ஒரு தாயாக பிந்துவால் காண முடிந்தது. கீர்த்தி, இப்போது தேவையில்லாமல் எதற்கும் பயப்படுவதில்லை. தைரியமான இளம்பெண்ணாக வளர்ந்தாள். படிக்கும் பாடங்கள் அவள் மனதில் பதிந்து, நினைவில் நின்றன. பத்தாம் வகுப்பில் முதல் தர மதிப்பெண்கள் பெற்றாள். தொடர்ந்து பன்னிரண்டாம் வகுப்பிலும் நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றாள்.
எஞ்ஜினியரிங் சேர்ந்த கீர்த்தி, கம்ப்யூட்டர் சயன்ஸ் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றாள். அவளுக்கு 2021ம் ஆண்டு டிசிஎஸ் (TCS)என்ற பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் பணி கிடைத்துள்ளது.
மகளது வாழ்வில் எட்டியுள்ள உயரத்தைக் கண்டு அம்மா பிந்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துகிறார்கள். தற்போது கர்நாடக மாநிலம் பீதர் பகுதியில் வசிக்கும் அவர்கள், அங்கிருக்கும் இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்தில் இளம் பங்காளர் திட்டத்தில் சேர்ந்ததன் மூலம் கடவுள் தன் மகளை ஆசீர்வதித்துள்ளது குறித்த சாட்சியை பகிர்ந்துகொண்டுள்ளார்கள்.
தான் அதிகம் படிக்காததால் மகள் கீர்த்தியை எப்படியாவது படிக்க வைக்கவேண்டும் என்ற ஆசை அம்மா பிந்துவுக்கு இருந்து வந்தது. ஆனால், பிள்ளை எவ்வளவுதான் முயற்சித்தாலும் அவளால் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் வாங்க இயலவில்லை.
உன் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள்; உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும் (ஏசாயா 54:13)
நம் பிள்ளைகளை நாம் நேசிப்பதைக் காட்டிலும் ஆண்டவர் அதிகமாக நேசிக்கிறார்; அவர்கள் பேரில் அக்கறையாய் இருக்கிறார். ஆகையால், பிள்ளைகளை அவரது கரங்களில் அர்ப்பணிப்பதே நாம் செய்யக்கூடிய ஞானமான காரியம்!
தேர்வுகளில் உயர் வெற்றி பெற இயலாத பிள்ளைகள், மனமுடைந்து போகிறார்கள்; சிலர் தவறான முடிவுகளையும் எடுக்கிறார்கள். தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான தெய்வீக ஞானத்தை அளிக்க ஆண்டவரால் மட்டுமே முடியும் (யாக்கோபு 1:5; கொலோசெயர் 3:2)
பல பிள்ளைகள் பல்வேறு உடல் பெலவீனங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். நல்ல ஆரோக்கியம் இருந்தால்தான் படிப்பில் கவனம் செலுத்த முடியும். ஆண்டவரால் நம் பிள்ளைகளை நற்சுகத்தோடு பாதுகாக்க முடியும் (யாத்திராகமம் 15:26)
இவ்வுலகம் பொல்லாங்கனாகிய பிசாசுக்குள் கிடக்கிறது. நம் பிள்ளைகளை உலகின் தீமைகளுக்கு விலக்கி பாதுகாக்க ஆண்டவரால் மட்டுமே முடியும் (1 நாளாகமம் 4:10).
உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் செய்வது...
- உங்கள் பிள்ளைகளை இளம் பங்காளராக இணைப்பதன் மூலம் அவர்களை ஆண்டவருடைய பராமரிப்புக்குள் ஒப்படைக்கிறீர்கள்.
- பிள்ளைகள் பெயரில் 'இயேசு அழைக்கிறார்' ஊழியத்திற்கு நன்கொடை அளிப்பதன் மூலம் ஆண்டவருக்கென்று கொடுக்கும் பழக்கத்தை அவர்களுக்கு ஏற்படுத்துகிறீர்கள்
உங்கள் பிள்ளைகளுக்கு 'இயேசு அழைக்கிறார்' ஊழியம் செய்வது...
"பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்" (3 யோவான் 2) என்ற வேத வசனத்தின்படி பிள்ளைகள் எல்லா ஆசீர்வாதங்களையும் பெறும்படி,
- இளம் பங்காளராக இணையும் பிள்ளைகளின் பெயர்களை 'இயேசு அழைக்கிறார்' ஜெப கோபுரத்தில் ஆண்டவர் சமுகத்தில் ஜெப வீரர்கள் அனுதினமும் உச்சரித்து ஜெபிக்கிறார்கள்.
- Dr. பால் தினகரன் குடும்பத்தினரும் இளம் பங்காளர்களுக்காக தினமும் விசேஷமாக ஜெபிக்கிறார்கள்.
- இளம் பங்காளரின் பிறந்தநாளின்போது ஜெப கோபுரத்திலிருந்து ஜெப வீரர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்தி ஜெபிப்பார்கள்.
- இளம் பங்காளரின் தனிப்பட்ட ஜெபக் குறிப்புகளுக்காகவும் விசேஷமாக ஜெப வீரர்கள் ஜெபிப்பார்கள்.
- ஜெப கோபுரங்களில் நடக்கும் மாணவர் / வாலிபர் கூட்டங்களில் கலந்துகொள்ள இளம் பங்காளருக்கு அழைப்பு அனுப்பப்படுகிறது.
- தினமும் SMS மூலம் வாக்குத்தத்தம் அனுப்பப்படுகிறது.
- இளம் பங்காளர் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
உங்கள் பிள்ளைகளுக்கு ஆண்டவர் செய்வது...
- இறைவனின் தமது திருக்கரங்களால் பிள்ளைகளை பாதுகாப்பார்.
- ஞானம், அறிவு, ஞாபக சக்தி இவற்றை அளித்து அவர்கள் கல்வி பொறுப்பை முழுவதுமாக ஏற்றுக்கொள்வார்.
- வறுமையற்ற, நோயற்ற ஆனால் செழிப்பும் பிரகாசமும் நிறைந்த எதிர்காலத்தை அருளிச் செய்வார்.
ஆண்டவரிடமிருந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்ட இளம் பங்காளர்களுள் சிலரின் சாட்சிகள்
தந்தையைப் போல் தாங்கிய ஆண்டவர்
நான் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்துவிட்டேன். மருத்துவருக்கு உதவியாளராக பணிபுரிவதற்கான (B.Sc., Physician Assistant) பட்டப்படிப்பு முடித்திருந்தேன். மதுரை நேரு நகரில் நான் வசிக்கும் பகுதியில் 'இயேசு அழைக்கிறார்' ஜெப கோபுரம் அமைந்துள்ளது. அங்கு சென்று எனக்கு வேலை கிடைக்கும்படி ஜெபிக்குமாறு கேட்டுக்கொண்டேன். அங்கிருந்த சகோதரி, இளம் பங்காளர் திட்டத்தை எனக்கு அறிமுகம் செய்தார்கள்.இளம் பங்காளர்களுக்காக தினமும் ஜெப கோபுரத்தில் ஜெபிப்பார்கள் என்று தெரிந்து கொண்டு 2020ம் ஆண்டு இளம் பங்காளராக இணைந்தேன். முதலில் மருத்துவமனையில் வேறு பிரிவிலும், பிறகு என் படிப்புக்கேற்ற வேலையும் கிடைத்தது.தாய், தகப்பனில்லாத என்னை ஜெப வீராங்கனைகள் மிகவும் நேசித்து எனக்காக தொடர்ந்து ஜெபித்தனர். ஜெப கோபுரத்தில் நடைபெறும் UTurn வாலிபர் கூட்டத்திலும் கலந்து கொண்டு ஜெபித்தேன். நேரம் கிடைக்கும்போதெல்லாம் தியான அறையில் ஜெபித்து வந்த என்னை ஆண்டவர் தமது ஆவியினால் நிறைத்தார்.ஆண்டவரை அறிந்த ஒருவரே எனக்கு வாழ்க்கைத் துணையாக வேண்டும் என்று வாஞ்சித்து ஜெபித்து வந்தேன். ஆண்டவரின் சித்தத்துக்கு என் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்து ஜெபித்த எனக்கு, சுற்றத்தார் மத்தியில் வெட்கப்படாதபடி நல்ல இல்லறவாழ்க்கையை அவர் அருளிச்செய்துள்ளார்.
- M. சோனியா சார்லஸ் பிரௌன்சன், மதுரை.
விரும்பிய படிப்பில் இடம்
நான் ஓர் இளம் பங்காளர். கடந்த 2020ம் ஆண்டு காருண்யா பல்கலைக்கழகத்தில் எஞ்ஜினியரிங் பட்டம் பெற்றேன். கொரோனா பெருந்தொற்று காலமாக இருந்தபடியால் மே மாதம் வரைக்கும் எனக்கு எந்த நிறுவனத்திலும் பணி வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆகவே, நான் சிறிது ஏமாற்றமடைந்தேன். எனக்கு பணி வாய்ப்பு கிடைக்கவேண்டுமென்று ஊக்கமாக ஜெபித்தேன். நவம்பர் மாதத்தில் விப்ரோ (WIPRO)நிறுவனத்தில் நான் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன். அது மிகவும் ஆச்சரியத்தை அளித்தது.ஆனாலும் என் மனதில் ஏதோ ஒரு திருப்தியின்மையை உணர்ந்தேன். மேற்படிப்பு படிக்கவேண்டும் என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது. நான் இளம் பங்காளராக இருந்தபடியினால் டெல்லியிலுள்ள இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்திற்குச் சென்று எனக்காக ஜெபிக்கும்படி ஜெப வீரர்களை கேட்டுக்கொண்டேன்.நான் பட்டமேற்படிப்பு படிப்பதற்கு மூன்று பல்கலைக்கழகங்களில் விண்ணப்பிக்க முடிவு செய்தேன். அந்த மூன்றில் ஒரு பல்கலைக்கழகத்தில் ஆண்டவர் எனக்கு பட்டமேற்படிப்பில் இடம் தர வேண்டுமென ஜெபித்து வந்ததேன். ஆண்டவர் நான் தெரிவு செய்திருந்தவற்றில் மிகவும் சிறந்த விஸ்கான்ஸின்-மேடிசன் என்ற அமெரிக்க பல்கலைக்கழகத்தில் (University of Wisconsin-Madison) எனக்கு பட்டமேற்படிப்பில் இடம் கிடைக்க உதவினார்.
-லுப்டவிஷா நேடாம், டெல்லி.
ஆண்டவர் தந்த விடுதலை
2015ம் ஆண்டு நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்போதிலிருந்து இரவு என் காதுகளில் யாரோ பேசுவதுபோன்று சத்தம் கேட்கும். அதனால் இரவு நேரங்களில் உறங்க முடியாமல் அவதிப்பட்டேன். பல ஆண்டுகள் இந்தப் பிரச்னை தொடர்ந்தது.2021ம் ஆண்டு 'இயேசு அழைக்கிறார்' ஜெப வீரர்கள் எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். அவர்களிடம் பிரச்னையை கூறியபோது, எனக்காக ஜெபித்துவிட்டு, மறுநாள் எங்கள் பகுதியில் (அஸ்ஸாம், திபு)இருக்கும் ஜெப கோபுரத்திற்கு வந்து ஜெபிக்கும்படி அழைத்தார்கள்.அங்கு நான் சென்று ஜெபித்தேன். 'இயேசு அழைக்கிறார்' இளம் பங்காளராக இணைந்தேன். அன்றிலிருந்து என் காதுகளில் யாரோ பேசுவதுபோன்ற உணர்வு நின்றது. நான் நிம்மதியாக உறங்குகிறேன். தற்போது பட்டப்படிப்பு படித்து வருகிறேன்.
-- சாரா ஹன்ஸிங், திபு, அஸ்ஸாம்
கர்த்தர் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் வர்த்திக்கப்பண்ணுவார் (சங்கீதம் 115:14)
ஆண்டவர் இதுபோன்ற அற்புதங்களை உங்கள் பிள்ளைகள் வாழ்விலும் செய்து ஆசீர்வதிக்க வல்லவராயிருக்கிறார்.
உங்கள் பகுதியில் அமைந்துள்ள 'இயேசு அழைக்கிறார்' ஜெப கோபுரத்தில் (அல்லது) ஜெப கோபுரம், 16, டி.ஜி.எஸ்.தினகரன் சாலை, சென்னை 600 028 என்ற முகவரிக்கு தபால் மூலம் தொடர்பு கொண்டு இளம் பங்காளராக இணைந்து கொள்ளலாம்.
90154 55455 என்ற எண்ணுக்கு மிஸ்டுகால் (missed call)கொடுத்து (அல்லது)
97919 34442 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் அனுப்பி (அல்லது)
.