அன்பானவர்களே, இன்றைய வாக்குத்தத்தம் உங்களுக்கும் உங்கள் சந்ததிக்கும் உரியதாக இருக்கிறது. நாம் உண்மையுள்ளவர்களாயிருக்கும்போது, ஆண்டவர் நம்மையும் நம் சந்ததியையும் ஆசீர்வதிக்கிறார். வேதம், "யாக்கோபு வேர்பற்றி, இஸ்ரவேல் பூத்துக்காய்த்து உலகத்தைப் பலனால் நிரப்பும் நாட்கள் வரும்" (ஏசாயா 27:6) என்று கூறுகிறது. எவ்வளவு அழகான வாக்குத்தத்தம்! இந்த வசனத்தில், நாம், 'யாக்கோபு வேர்பற்றுவான்' என்று பகுதியை முதலாவதாகவும், யாக்கோபு வேர்பற்றும்போதுதான் இஸ்ரவேல் பூத்துக்காய்க்கும் என்ற பகுதியை இரண்டாவதாகவும் காண்கிறோம்.
நீங்கள் ஆண்டவருக்கும் அவர் அழைப்புக்கும் உண்மையாயிருக்கும்போது உங்கள் தலைமுறை ஆசீர்வதிக்கப்படும். அப்படி நடப்பதற்கு, நீங்கள் ஆண்டவரை நெருங்கியிருக்கவேண்டும். வேதம், "தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார்," என்று கூறுகிறது. ஆகவே, இன்று நீங்கள் இயேசுவை விட்டு தொலைவில் இருந்தால், தாமதிக்காமல் அவரிடம் சேருங்கள். தினமும் வேதத்தை வாசியுங்கள்; அவர் உங்களுக்கு அளிக்கும் எல்லா வாக்குத்தத்தங்களையும் எழுதுங்கள்; அவரை கிட்டிச்சேருங்கள். வேரூன்றுங்கள்; அப்படிச் செய்யும்போது, உங்கள் தலைமுறை பாக்கியம் பெறும்; அவர்களும் கனி கொடுக்க ஆரம்பிப்பார்கள்.
அந்த மரம் ஆசீர்வதிக்கப்படும் என்று நாம் அறிந்திருக்கிறோம். அவ்வண்ணமாகவே, இந்த உலகத்தில் நாம் கொடுக்கும் கனியானது, நாம் எதைச் செய்தாலும் அதை ஆண்டவர் கவனிப்பார். ஆண்டவர் நிச்சயமாகவே உங்களையும் உங்கள் சந்ததியையும் ஆசீர்வதிப்பார். நாம் தேவையின்றி பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் கணக்குக் கொடுக்கவேண்டும் என்று கர்த்தர் கூறுகிறார். ஆகவே, நம் நேரத்தை செலவிடுவதைக் குறித்து கவனமாயிருப்போம்; ஆவிக்குரிய வேலையைச் செய்வதில் நம் நேரத்தை செலவிடுவோம்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நீர் எனக்குத் தந்திருக்கும் ஆச்சரியமான வாக்குத்தத்தத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். அனுதினமும் கிறிஸ்துவில் ஆழமாக வேரூன்ற எனக்கு உதவும். ஆண்டவரே, உம்மை கிட்டிச்சேரவும், தொடர்ந்து உம் உள்ளத்துக்கு நெருங்கியிருக்கவும் எனக்கு உதவி செய்யும். உம் அழைப்பில் உண்மையாக நடப்பதற்கு எனக்குக் கற்றுக்கொடுத்தருளும். நான் உம்மில் வேரூன்றியிருப்பதால், உம் வாக்குத்தத்தத்தை என் வாழ்வில் நிறைவேற்றும். ஆண்டவரே, என் குடும்பத்தை ஆசீர்வதியும்; அவர்களை உம் கிருபையால் மூடும். எப்போதும் உமக்குப் பிரியமான கனியை தருவதற்கு எனக்கு உதவவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


