என் தந்தை, சகோ.டி.ஜி.எஸ். தினகரன் ஆண்டவரைக் கண்டுகொண்ட நாள் இதுவே ஆகும். அவர் தம் வாழ்வை இயேசுவுக்கு அர்ப்பணித்து, அவர் செய்திருந்த பாவங்கள் எல்லாவற்றுக்கும் இயேசுவிடம் மன்னிப்பு பெற்று, கிறிஸ்துவுக்குள் புதுச்சிருஷ்டியானார். அப்போதிலிருந்து எத்தனையோ லட்சக்கணக்கானோர் அவரது ஊழியத்தின் மூலம் மறுரூபமாக்கப்பட்டு ஆண்டவரைக் கண்டு கொண்டனர். அன்பானவர்களே, தேவனை சுமப்பதற்கு, அவருடைய ஆலயமாக இருப்பதற்கு நம்மை மீண்டும் ஒரு முறை அர்ப்பணிப்போமா? நாம் அவருக்குப் பரிசுத்தமும் உகந்ததுமான ஆலயமாக மாறுவோம். தேவன் நம்மை ஆசீர்வதித்து, நம்மையும் ஆசீர்வாதமாக விளங்கப்பண்ணுவார். "அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்" (ரோமர் 8:28) என்று இன்றைய வாக்குத்தத்தம் கூறுகிறது. நீங்கள் உங்கள் வாழ்வை இயேசுவுக்குக் கொடுத்திருக்கிறீர்கள் என்றும், ஆண்டவரை நேசிக்கிறீர்கள் என்றும் அறிந்திருக்கிறேன். உங்கள் வாழ்வில் சகலமும் நன்மைக்கேதுவாக நடக்கவேண்டும் என்று ஜெபிக்கிறேன்.

நாம் இயேசுவில் அன்புகூர்ந்து, அவருடைய நோக்கத்திற்காக நடக்கும்போது நமக்கு என்ன நன்மை கிடைக்கும்? முதலாவது, மக்கள் நமக்கு செய்யும் தீங்கானவற்றை தேவன் நன்மையாக மாற்றுகிறார். யோசேப்பின் ஆசீர்வாதத்தின்மேல் பொறாமை கொண்ட அவன் சகோதரர், அவனை அடிமையாய் விற்றுப்போட்டதுடன், காட்டு விலங்கு அவனை கொன்று விட்டது என்றும் தங்கள் தந்தையிடம் கூறினர் (ஆதியாகமம் 50:19,20). அவர்களுக்கு யோசேப்புடனான தொடர்ந்து அற்றுப்போனாலும், யோசேப்பு தேவனை நேசித்ததால், அவர் அவனோடு கூட இருந்தார்; அவன் பரிசுத்த ஆவியின் வரங்களையும் பெற்றுக்கொண்டான். அந்நிய தேசமாகிய எகிப்தில், பிரதானி ஒருவனுக்கு அடிமையாக அவன் விற்கப்பட்டாலும், கர்த்தர்பேரில் யோசேப்பு கொண்டிருந்த அன்பினாலும், மனுக்குலத்தைக் காக்கும்படி அவன் அழைக்கப்பட்டிருந்தபடியினாலும் ஏற்ற வேளையில் தேவன் அவனை உயர்த்தினார். அப்படியே, உங்கள் வாழ்க்கையைக் குறித்து தேவன் ஒரு நோக்கத்தை வைத்திருக்கிறார். யோசேப்பைப்போல நீங்களும் மனுக்குலத்தைக் காக்கும்படி அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். பஞ்சம், இயற்கை சீற்றங்கள், பொறாமை, பொல்லாத வார்த்தைளின் மத்தியிலும் தேவனுடைய நன்மை, உங்கள் வாழ்க்கையைக் குறித்த அவரது நோக்கம் நிறைவேறும்படியாய் பின்தொடரும்.

யோசேப்பு தேவனுடைய நோக்கத்திற்கு தன்னை அர்ப்பணித்தான்; அவன் பாவமே செய்யாதிருந்தபோதும் சிறைக்குச் சென்றான்; ஆனால், தேவன் அவனை வெளியே கொண்டு வந்தார்; அவன் சகோதரர்கள் அவன் காலில் விழுந்து உணவுக்காக கெஞ்சும்படி செய்தார். தேவன், உங்கள் வாழ்க்கையில் சகலவற்றையும் நன்மையாக முடியும்படி செய்வார்; பெருத்த கனமும் சமாதானமும் பெறுவீர்கள்; ஆகவே, உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக. இரண்டாவதாக, மற்றவர்களை மன்னிப்பதற்கான வல்லமையை நீங்கள் பெற்றுக்கொள்ளும்படி தேவன் உங்கள் வாழ்வில் தீமைகளையெல்லாம் நன்மையாக மாற்றுவார். யோசேப்பு, தன் சகோதரர்களாலும் பிரதானியாலும் பொய்யாய் குற்றம் சாட்டப்பட்டு, துரோகம் செய்யப்பட்டாலும் தேவன் மன்னிக்கிறதற்கான இருதயத்தை அவனுக்குக் கொடுத்தார். அவன், அவர்கள் வாழ்வதற்கும் தங்கள் மந்தைகளை மேய்ப்பதற்கும், குடும்பத்தை நடத்துவதற்கும் அவர்களுக்கு நிலத்தைக் கொடுத்து, பாதுகாத்து கனப்படுத்தினான். தேவன் தன்னுடைய தற்சுரூபமாகிய இயேசுவின் மூலம், தம்மைத்தாமே தாழ்த்தினார்; பாவங்களை மன்னித்தார்; தேவன் எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்துடன் அவரை எழுப்பினார் என்று வேதம் கூறுகிறது (பிலிப்பியர் 2ம் அதிகாரம்). இயேசுவின் நாமத்தில், வானத்திலும் பூமியிலும் பூமிக்குக் கீழும் எல்லா முழங்கால்களும் முடங்கும். பரலோகத்திலும் பூமியிலும் பாவங்களை மன்னிப்பதற்கு, சிலுவையில் கள்ளனை கொண்டு சென்றதுபோல, பரலோகத்திற்குக் கொண்டு செல்வதற்கு அவருக்கு அதிகாரம் இருக்கிறது.

நாம் மற்றவர்களை மன்னிக்கும்போது, தேவன், தம் பரிசுத்த ஆவியை நம்மேல் அனுப்புகிறார். பரிசுத்த ஆவியானவர் நம்மேல் வரும்போது, நாம் இயேசுவின் நாமத்தில் பாவங்களை மன்னிப்பதற்கான அதிகாரத்தைப் பெற்றுக்கொள்கிறோம்; மக்களை இயேசுவினிடமும் மன்னிப்பண்டைக்கும் வழிநடத்துகிறோம். மூன்றாவதாக, தேவனுடைய சித்தத்திற்கு நம்மை அர்ப்பணிக்கும்போது, கிறிஸ்துவின் சுபாவத்தை பெறும்படி சகலமும் நமக்கு நன்மைக்கேதுவாகவே நடக்கும். வியாதியை, பெலவீனத்தை, பாவ அடிமைத்தனத்தை குணமாக்கும் சுபாவத்தை பெறும்படியாக அதே கிருபை நமக்கு அருளப்படுகிறது. 1969ம் ஆண்டு என் தந்தையின் நுரையீரல்கள் பழுதுபட்டு, மரண தறுவாயில் இருந்தபோது, இயேசு அவருக்குக் காட்சியளித்து, பாடுகளின், வேதனையின் வழியாக கடந்து செல்லும்போது, மக்களின் வலியை புரிந்துகொள்ளமுடியும் என்றும், உள்ளமுடைந்த மக்களுக்கு இவரது மனதுருக்கத்தின், கண்ணீரின் மூலம் சுகம் கிடைக்கும் என்றும் கூறினார். இறுதியாக, ஆசீர்வாதம் பெருகும்படி சகலமும் நன்மைக்கேதுவாக நடக்கும். ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்கு முன்பாக, இயேசு அழைக்கிறார், காருண்யாவில் நாங்கள் மிகுந்த கடனின் வழியாக சென்று கொண்டிருந்தபோது, ஆண்டவர், "மக்களை நேசியுங்கள்," என்பதற்கு தேவ ஊழியர்கள் என்று அர்த்தமாகும் என்று கூறினார். "அவர்கள் ஆலயங்களை கட்டுவதற்கு, கூட்டங்களை நடத்துவதற்கு உதவும்போது, அவர்கள் சிகிச்சைக்கான செலவுகளை சந்திக்கும்போது, அவர்கள் செய்யும் ஜெபத்தின்மூலம் நான் உன்னை கடனிலிருந்து வெளியே கொண்டுவருவேன்," என்று கூறினார். அன்பானவர்களே, பயப்படாதிருங்கள். தேவனுடைய பிள்ளைகள்பேரில் நீங்கள் கரிசனை கொண்டு, அவர்களுக்கு நன்மை செய்தால், தேவன் உங்களை விருத்தியாக்குவார். பரிசுத்த ஆவியானவர் உங்கள்மேல் வல்லமையாக இறங்குவாராக; சகலமும் உங்களுக்கு நன்மைக்கேதுவாக நடப்பதாக.

ஜெபம்:
ஆண்டவரே, என் வாழ்க்கையை உம் அன்பின் கரங்களுக்குள் அர்ப்பணிக்கிறேன். நீர் வாக்குப்பண்ணியபடியே, என் வாழ்வில் எல்லாம் நன்மைக்கேதுவாகவே நடக்கட்டும். தயவாய் மன்னிக்கிற இருதயத்தை எனக்குத் தந்து, உம் பரிசுத்த சுபாவம் என்னில் வெளிப்படட்டும். எனக்குள் உடைந்துபோன பகுதிகளுக்கு ஆரோக்கியம் தந்து, மக்களைக் குறித்த மனதுருக்கத்தினால் என்னை நிரப்பும். உமக்கு நான் முற்றாய் கீழ்ப்படிகிறபடியினால் உம் ஆசீர்வாதங்கள் பன்மடங்காய் பெருகுவதாக.  நான் உம் பரிசுத்த ஆலயமாக விளங்கி, உம் நாமத்திற்கு மகிமையை கொண்டு வரவேண்டுமென்று இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.