எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம் ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையான இனிய நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்று, "இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்" (யோவான் 14:23) என்ற வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்தவனி(ளி)ன் வாழ்க்கை எவ்வளவு ஆசீர்வாதமானது! முதலாவதாக, நீங்கள் தேவனுடைய வார்த்தையைக் காத்துக்கொள்ளவேண்டும். அதற்கு, உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அதிகமாக தேவனுடைய வார்த்தையை வாசிக்கவேண்டும். அப்படிச்செய்யும்போது, தகப்பனாகிய தேவன் உங்களை நேசிப்பார். இயேசு, "நாங்கள்" என்று, அதாவது பிதாவும் குமாரனும் வந்து, வேதத்தை வாசிப்பவருடன் தங்குவோம் என்று சொல்கிறார். தகப்பனாகிய தேவனும் தேவ குமாரனும் வந்து உங்களோடு தங்கியிருப்பார்கள். இது எவ்வளவு ஆச்சரியமான ஆசீர்வாதம்!
தினமும் நம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தேவனுடைய வார்த்தையை வாசிக்கவேண்டும். தேவ சமுகத்தில் ஜெபிப்பதோடு, உங்கள் இருதயத்தின் விருப்பங்களையும் தேவைகளையும் ஊற்றிவிடவேண்டும். உண்மை கிறிஸ்தவனா(ளா)க விரும்பினால், தினமும் குறிப்பிட்ட நேரத்தில் இதைச் செய்யவேண்டும். அதிகாலையில் எழும்புங்கள். அநேக இளம் பெண்கள், இளைஞர்கள் தினமும் காலை 10 மணி, 11 மணி வரை தூங்குகிறார்கள். இயேசு அதிகாலையில் எழுந்து தம் பிதாவுடன் நேரம் செலவழித்தார் (மாற்கு 1:35) என்று எழுதப்பட்டிருக்கிறதுபோல, நடந்துகொள்ளுங்கள்.
அவ்வாறே, மார்த்தாளின் சகோதரியாகிய மரியாளைக் குறித்து வாசிக்கிறோம். அவள் ஆண்டவருடன் எவ்வளவு நெருங்கி ஜீவித்தாள் என்று பார்க்கிறோம். ஆண்டவராகிய இயேசுவே, "தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள்" (லூக்கா 10:42) என்று கூறினார். "மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள்; அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள்," என்று வேதம் கூறுகிறது (லூக்கா 10:39). தேவனுடைய வசனத்தைக் கேளுங்கள்; அவரது பாதத்தில் காத்திருங்கள்.
தேவனுடைய வார்த்தையை வாசித்தல், இயேசுவின் பாதத்தில் ஜெபத்தில் நேரம் செலவிடுதல் ஆகிய இரண்டு காரியங்களும் வாழ்க்கையை ஆசீர்வதிக்கும். இப்போது நம் வாழ்க்கையை அர்ப்பணித்து ஆண்டவரை நோக்கிப்பார்ப்போம். இந்த இரண்டு ஆசீர்வாதங்களையும் உங்களுக்குக் கொடுக்கும்படி அவரிடம் கேளுங்கள்.
ஜெபம்:
அருமையான பரம தகப்பனே, உம்மோடு நெருங்கி ஜீவிக்கும்படி கேட்கும் ஒவ்வொருடைய தேவைகளையெல்லாம் இப்போதே அருளிச்செய்திடும். அவர்களால் இயன்ற அளவு தினமும் உம் வார்த்தையை வாசிப்பதற்குக் கிருபை அளித்திடும். உம் வார்த்தையை தியானித்து, அதன்படி வாழ உதவும். மரியாளைப்போல இயேசுவின் பாதத்தில் அமர்ந்து உம் சத்தத்தைக் கேட்கவும் ஜெபத்தில் உம்மையே உறுதியாகப் பற்றிக்கொள்ளவும் உதவி செய்யும். ஆண்டவரே, இதுபோன்ற ஆவிக்குரிய வாழ்க்கையை விரும்பும் அனைவரையும் ஆசீர்வதித்தருளும். உம்மை கிட்டிச்சேர்ந்திருப்பதோடு அனுதினமும் உம் பிரசன்னத்தை அனுபவிக்கும்படியும் நடத்திடும். அவர்கள் வாழ்க்கை, உம் வார்த்தையிலும் ஜெபத்திலும் வேர்கொண்டிருக்கவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


