அன்பானவர்களே, இன்று ஆண்டவர் நம் கரத்தைப் பிடித்து, நம்பிக்கையுடன் நடத்துகிறார். உங்களுக்கும் அவர் சமீபமாயிருக்கிறார். வேதம், "அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும், கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான்" (எரேமியா 17:8) என்று கூறுகிறது. அது கனி கொடுக்க ஒருபோதும் தவறுவதில்லை. ஆமென்! அவ்விதமாக ஆண்டவர் நம்மையும் நம் வாழ்வையும் பெலப்படுத்தப்போகிறார். தண்ணீரண்டை நாட்டப்பட்ட மரத்திற்கு எல்லாமும் கிடைப்பதால் அது சமாதானமாயிருக்கும். அந்த மரம் செழிப்பதையும், நீரோடை அண்டையில் அழகாக இருப்பதையும் நீங்கள் காணலாம். அப்படியே, வேதாகமத்திலிருந்து நாம் தேவனுடைய வார்த்தையைப் பெற்றுக்கொள்ளும்போது, நம் வாழ்விலும் சமாதானம் பூரணமாக நிறைந்திருக்கும்.
எங்கள் மனம் சமாதானத்தால் நிரம்பும். வார்த்தையைப் பெறுவதற்கான, எங்கள் வாழ்க்கையைக் குறித்து சிந்திப்பதற்கான தெளிவையும் தேவனுடைய வார்த்தையிலிருந்து அடைகிறோம். இல்லாவிட்டால், நாங்கள் பதற்றமாயும், பயமுள்ளவர்களாயும், நெருக்கடிக்குள் இருக்கிறவர்களாகவும், தேவனை அனுபவிக்க முடியாதவர்களாகவும் இருப்போம். ஆனால், இந்த சமாதானம், தேவனுடைய வார்த்தையையும், நோக்கத்தையும் பெற்றுக்கொள்ளும்படியாக எங்களை வழிநடத்துகிறது. இரண்டாவதாக, தேவனுடைய வார்த்தையிலிருந்து வேண்டிய போஷாக்கை பெற்றுக்கொள்ளவும் செய்கிறது. தண்ணீரிலிருந்து கிடைக்கும் சத்துகளால் மரம் செழிப்பதுபோல, அவர் எங்களைப் போஷிக்கிறார். வார்த்தை எங்களுக்குள் ஜீவனையும் நம்பிக்கையையும் கொண்டு வருகிறது.
அன்று அந்த வார்த்தை எங்களுக்காக கிரியை செய்ததுபோல, நாங்கள் கனி கொடுக்க தவறுவதில்லை. நாங்கள் கனி கொடுப்போம். பெரிய அறிவியலறிஞரான ஐசக் நியூட்டனிடம், ஆராய்ச்சி செய்து அநேகமானவற்றை கண்டுபிடித்ததின் இரகசியம் என்ன என்று கேட்கப்பட்டபோது, அவர், தாம் சிறுவனாயிருந்தபோதிலிருந்தே தன் பாட்டி கூறியபடி, தினமும் தேவனுடைய வார்த்தையை வாசித்து தியானித்து வருவதாக சொன்னார். தாம், தேவனுடைய வார்த்தைகளை தொடர்ந்து பின்பற்றுவதாகவும் கூறினார். அதுவே தமக்கு ஆசீர்வாதத்தின்மேல் ஆசீர்வாதத்தை கொண்டு வருகிறது என்றும் தெரிவித்தார். நாமும் அப்படியே தண்ணீரண்டை நாட்டப்பட்ட மரமாக மாறுவோமாக.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என் கரத்தைப் பிடித்து என்னை வழிநடத்துவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். தண்ணீரண்டையில் நாட்டப்பட்ட மரம்போல, என்னை உம் வார்த்தையில் ஆழமாக நாட்டியருளும். என் உள்ளத்தையும் மனதையும் உம் பரிபூரணமான சமாதானத்தால் நிறைத்தருளும். என் வாழ்க்கையிலிருந்து எல்லா பயத்தையும் குழப்பத்தையும் அகற்றிப்போடும். உம் சத்தியத்தால் அனுதினமும் என்னை போஷியும்; என் ஆவியை ஸ்திரப்படுத்தும். உம் வார்த்தை எனக்குள் ஜீவனையும் நம்பிக்கையையும் தெளிவையும் கொண்டு வரட்டும். தினமும் உம் வார்த்தையை தியானிக்க எனக்கு உதவி செய்யும். எல்லா காலத்திலும் நான் கனி கொடுக்கும்படி செய்யவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


