எனக்குப் பிரியமான நண்பரே, உங்கள் வீட்டை எப்படி நிலைநிறுத்துவது என்பதைப் பற்றி நான் உங்களிடம் பேசப் போகிறேன். நமது வாழ்க்கையை எப்படி ஸ்திரப்படுத்துவது? அதற்கான ஒரே வழி சங்கீதம் 127:1-ல் காணப்படுகிறது,
“கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா.”
ஆம். தேவனே எல்லாவற்றையும் கட்டுகிறவர் (எபிரெயர் 3:4). உங்கள் வாழ்க்கையில் உடைந்த, சிதைந்த அல்லது அழிக்கப்பட்ட அனைத்தையும் கர்த்தர் மீண்டும் கட்டுவதாக இந்த மாதத்தில் வாக்குத்தத்தம் பண்ணுகிறார்.
1. தேவன் ஒரு வீட்டைக் கட்டும்போது, அதை ஒரு ‘சமாதானமான வீடாக’ கட்டுகிறார்: நாம் நீதியாக வாழ்ந்து, இதையெல்லாம் செய்யவேண்டுமென்று தேவன் விரும்பும் வழியில் வாழும்போது, அது நம் வாழ்வில் சமாதானம், செழிப்பு, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியைக் கொண்டு வரும். அவர் நமக்கான எல்லாவற்றையும் கவனித்துக்கொள்வதோடு, நமக்கு இளைப்பாறுதல் மற்றும் சமாதானமான வாழ்க்கையையும் கட்டளையிடுவார். (ஏசாயா 32:18; சங்கீதம் 147:14; அப்போஸ்தலர். 9:31)
2. தேவன் தமது ‘இரட்சிப்பால்’ நிறைந்த ஒரு வீட்டை நமக்குத் தருகிறார்: ஒரு குடும்பத்தில் ஒருவர் இரட்சிக்கப்பட்டு, இயேசுவைப் பின்பற்றும்போது, அந்த வீட்டில் உள்ள மற்றவர்களும் தேவனுடைய பிள்ளையாக மறுரூபமாக்கப்படுவதற்கான நல்தாக்கத்தைப் பெறுகிறார். கணவன் மனைவி இருவரும் தங்களுக்குள் விசுவாசத்தைக் காத்துக்கொள்ளும்போது, அவர்களுடைய பிள்ளைகள் தேவபக்தியுடனும் வளர்ந்து, அவர்களுடைய பிள்ளைகள் இரட்சிக்கப்படுவார்கள். பின்மாற்றமான நிலையிலிருந்து கர்த்தரிடம் திரும்புவார்கள். (அப்போஸ்தலர் 16:31; 1 கொரிந்தியர். 7:14; மல்கியா 2:14 ; எரேமியா 3:22)
3. தேவன் நமது குடும்பத்தையும், நமது வீட்டையும் ஒரு ‘ஊழியம் செய்யும் குடும்பமாக’ கட்டுவார்: நாம் கர்த்தருக்கு ஊழியஞ்செய்து, அவருடைய அன்பை மக்களுடன் பகிர்ந்துகொண்டு, அவர்களுக்காக நமது வீட்டைத் திறக்கும்போது, நாம் கர்த்தரின் அடையாளங்களாக இருப்போம், தேவன் நமது குடும்பத்தில் உயிர்த்தெழுதலின் வல்லமையினால் நம்மைக் கனப்படுத்துவார்.
மார்த்தாள், மரியாள், லாசரு ஆகியோர் வந்து இயேசுவின் வார்த்தைகளைக் கேட்கும்படி தங்கள் இல்லத்தை திறந்து வைத்தனர். பின்னர் இயேசு லாசருவை மரணத்திலிருந்து உயிரோடு எழுப்பினார், இந்த அற்புத நிகழ்வானது பலர் இயேசுவை விசுவாசிக்கும்படி நடத்தியது. (லூக்கா 10:38-42; யோவான் 11:38-43)
4. உங்கள் வீடு ‘பலமாக ஸ்திரப்படுத்தப்பட்ட வீடாக’ மாறும்: நாம் தேவனுடைய வார்த்தையின் மூலம் நம் வீட்டையும், நம் வாழ்க்கையையும் ஸ்திரப்படுத்தி, தேவன் நம்மை வழிநடத்துகிறபடி செய்யும்போது, வெள்ளம் வந்தாலும், மழை பெய்தாலும், காற்று வீசினாலும் நம் வீடு என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். குடும்பத்தில் பலமான ஒற்றுமையும் பிணைப்பும் இருக்கும், அது குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களுக்கு நம்மை ஒரு ஆசீர்வாதமாக மாற்றும். (ஏசாயா 8:18; 1 கொரிந்தியர். 10:4; எபேசியர் 2:20; 5:22,23, 31)
5. உங்கள் வீடு ‘ஆசீர்வதிக்கப்பட்ட வீடாக’ இருக்கும்: நாம் கொடுக்கும்போது, நம் வீடு ஆசீர்வதிக்கப்பட்டு, பலப்படுத்தப்படும். முதலாவது தேவனுடைய பணிக்கும், பின்னர் தேவனுடைய ஊழியர்களின் தனிப்பட்ட தேவைகளுக்கும், அதன்பின் நம் உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும் கொடுக்க வேண்டும். (சங்கீதம் 115:12; மத்தேயு 6:3; லூக்கா 6:38; மல்கியா 3:10, சங்கீதம் 16:2,3; 1 தீமோத்தேயு 5:8; ஏசாயா 58:7, 8)
உங்கள் இருதயத்தைத் தேவனுக்குத் திறவுங்கள். இந்த நாளில் இயேசு உங்கள் வாழ்வில் கட்டப்படுவாராக.
குடும்ப ஆசீர்வாதத் திட்டத்தில் சேர்ந்து, கர்த்தரோடு இணைந்திருங்கள். ஒவ்வொரு நாளும் ஜெபக் கோபுரத்தில் உங்களுக்காக ஜெபம் தொடங்கப்படட்டும். ஜெபத்தால் நாங்கள் உங்களைத் தாங்க விரும்புகிறோம். இந்த ஆசீர்வாதங்கள் அனைத்தும் உங்கள் இல்லத்தின்மீது வருவதாக, தேவன் உங்கள் குடும்பத்தைக் கட்டியெழுப்புவாராக. https://bit.ly/jc_fbp என்ற லிங்க்கை கிளிக் செய்து இப்போதே பதிவு செய்யுங்கள்.
இந்த மாதம் புதிய நிதியாண்டின் தொடக்கமாக இருப்பதால், தேவன் உங்களைச் செழிப்பாக்கி, உங்கள் வாழ்வில் உள்ள அனைத்தையும் கட்டியெழுப்புவாராக.
‘என் அன்பின் பரலோகத் தந்தையே, உம்முடைய பிள்ளையின் வாழ்க்கையை, அவர்களின் ஆரோக்கியத்தை, வேலையை, வீட்டை மற்றும் உறவுகளைக் கட்டியெழுப்பும். உம்முடைய வார்த்தையின் மூலம் அதைக் கட்டியெழுப்ப அவர்களுக்குக் கிருபையைத் தந்து, இந்த ஆசீர்வாதங்கள் அனைத்தையும் அனுபவிக்க அவர்களுக்கு இளைப்பாறுதலைத் தாரும்.’ உமது வல்லமையுள்ள நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.’
Dr. பால் தினகரன்
தலைமை இயக்க அதிகாரியின் மேசையிலிருந்து:
மார்ச் மாதத்தில் உங்களால் ஏற்பட்ட தாக்கம்
கடந்த மாதம், பரிசுத்த ஆவியானவரின் மகத்தான அசைவாடுதல் மற்றும் தேவனுடைய பிரசன்னத்தின் அலைகள் மக்கள்மீது இருந்ததை நாங்கள் கண்டோம், இதன் மூலம் ஜனங்கள் சுகமடைந்தார்கள், இழந்ததைப் பெற்றுக்கொண்டார்கள், பாவ மற்றும் அடிமைத்தனத்தின் சங்கிலிகள் உடைக்கப்பட்டன; திரளான ஜனங்கள் தங்கள் இருதயங்களை இயேசுவின் அன்பிற்கு அர்ப்பணித்தார்கள். தினகரன் குடும்பத்தினர் கடந்த மாதம் பல இடங்களில் ஊழியம் செய்தார்கள். அவர்கள் தமிழ்நாட்டின் அருமனையில் நடைபெற்ற 'இயேசு அழைக்கிறார் போதகர்கள் ஆசீர்வாதக் கூட்டத்தில்' ஊழியம் செய்தார்கள், மேலும் பெங்களூரு, ஃப்ரேசர் டவுன் ஜெபக் கோபுரத்தில் 'இயேசு அழைக்கிறார் பங்காளர்களுக்காக' நாள் முழுவதும் ஜெபித்தார்கள்.
கடந்த மாதம் பரிசுத்த ஆவியானவர், 'தேவன் பரிசுத்தவான்களுக்கும் நீதிமான்களுக்கும் நீதி செய்கிறார்' என்று Dr. பால் தினகரன் அவர்களிடம் பேசியது போலவே, மகாராஷ்டிராவின் சாங்லியில் நடைபெற்ற பிரார்த்தனை திருவிழாவில் இந்தத் தெய்வீக வாக்குத்தத்தம் நிறைவேறினதை நாங்கள் துல்லியமாகக் கண்டோம். கூட்டத்தை நிறுத்தும்படியாக மும்பை உயர் நீதிமன்றத்தில் ஒரு புகார் தாக்கல் செய்யப்பட்டது, ஆனால் தேவன் எங்களுக்காக வல்லமையாகச் செயல்பட்டு, உயர் நீதிமன்றத்திடமிருந்து எங்களுக்கு ஒரு நல்ல தீர்ப்பு கிடைத்தது. அந்தத் தீர்ப்பானது காவல்துறை அனுமதி ரத்து அறிவிப்பைத் தள்ளுபடி செய்து, பிரார்த்தனைத் திருவிழாவை 2,3-ம் நாட்களில் தொடர்ந்து கூட்டம் நடத்த அனுமதித்தது. அந்நாட்களில் ஒவ்வொரு நாளும் சுமார் 50,000 மக்கள் நேரில் கூடினர், மேலும் லட்சக்கணக்கானோர் சமூக ஊடகங்கள் மூலம் பங்குபெற்று ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டனர். தினகரன் குடும்பத்தினர் அங்குள்ள போதகர்கள் மத்தியில் ஊழியம் செய்தனர்; அவர்கள் புதிய அபிஷேகத்தையும் தேவனுடைய தொடுதலையும் பெற்றுக்கொண்டு, அவர்களும் அங்குள்ள பங்காளர்களுடன் ஜெபித்தனர்.
தேவன் இந்தக் கூட்டங்கள் அனைத்திலும் வல்லமையான சாட்சிகளை எழுப்பினதை நாங்கள் கண்டோம், ஆண்டவர் இயேசு மகிமைப்பட்டார். தினகரன் குடும்பத்தினருடன் துணை நின்றதற்காக நன்றி. எங்கள் குடும்பத்திற்காகவும் ஊழியத்திற்காகவும் நீங்கள் செய்யும் தொடர்ச்சியான ஜெபங்களை நாங்கள் மேன்மையாக எண்ணுகிறோம். கடந்த மாதம் எங்கள் ஊழியத்தில் உங்கள் தாராளமான விதைப்பு ஏற்படுத்திய தாக்கங்களை இங்கே காணலாம்:
- தொலைபேசி ஜெப அழைப்புகள் மூலம் 3.7 லட்சம் மக்களுக்கும்,
- 'பதிவு செய்யப்பட்ட குரல் பிரார்த்தனை (Dial A Prayer) மூலம் 12,720 மக்களுக்கும்,
- கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல்கள் மூலம் 59,860 மக்களுக்கும்,
- எங்கள் ஜெபக் கோபுரங்களுக்கு வந்த 1.38 லட்சம் மக்களுக்கும் தனி ஜெபங்களையும் ஏறெடுத்து, நாங்கள் ஊழியம் செய்தோம்.
- சமூக ஊடகங்கள் மூலம், நம்பிக்கை மற்றும் தேவனுடைய அன்பின் நற்செய்தியைக் கொண்டு மக்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தி, சுமார் 2.50 கோடி பார்வையாளர்களைப் பெற்றோம்.
- ஜெபக் கோபுரம் மூலம் 3,290 நிகழ்வுகள் நடத்தப்பட்டன, இதன் மூலம் 1.03 லட்சம் மக்கள் தொடப்பட்டனர்.
ஏப்ரல் மாத ஊழியம்
டைனமிக் கிட்ஸ் கேம்ப்: இந்த ஏப்ரல்/மே மாதத்தில், இந்தியா முழுவதும் உள்ள இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரங்களில், 6 முதல் 12 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்காக 6 நாட்கள் டைனமிக் கிட்ஸ் கேம்ப் ஒன்றை நாங்கள் ஏற்பாடு செய்ய உள்ளோம். அனுமதி இலவசம். இந்த ஆண்டு 20,000 பிள்ளைகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம். எனவே, உங்கள் பிள்ளைகளை அனுப்பி, அவர்களை உற்சாகப்படுத்துங்கள். நீங்கள் ஒரு பிள்ளைக்கு (ரூ. 300/-) அல்லது இரண்டு பிள்ளைகளுக்கு (ரூ. 600/-) அல்லது கர்த்தர் உங்களை வழிநடத்துகிறபடி, எத்தனை பிள்ளைகளுக்கு வேண்டுமானாலும் நிதியுதவி செய்யலாம்.
மேலும், நீங்கள் வந்து குழந்தைகளுக்குப் போதிக்க அல்லது வழிநடத்த உங்கள் நேரத்தை தன்னார்வமாகச் செலவிடலாம். மேலும் தகவல்களுக்கு [email protected] என்ற இணையதளத்தைப் பார்வையிடுங்கள்.
காட்கோபர் ஜெப கோபுரம்: இது மும்பை நகர மக்களுக்கு நம்பிக்கை, சுகம் மற்றும் நல்மாற்றத்திற்கான ஒரு மையமாகும். இன்றுவரை, இந்த ஜெப கோபுரத்தின் மூலம் 30 லட்சத்திற்கும் அதிகமானோரின் வாழ்வில் நல்தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆண்டு, நூற்றுக்கணக்கான விசுவாசமுள்ள மன்றாட்டு ஜெபவீரர்களுக்குப் பயிற்சி அளித்து அவர்களை ஆயத்தப்படுத்துவதன் மூலம் நமது வெளி ஊழியத்தைப் பலப்படுத்தி, கிறிஸ்துவின் அன்பினால் 1,20,000 மக்களின் வாழ்க்கை மறுரூபமாகும்படி நாங்கள் ஜெபித்துக்கொண்டிருக்கிறோம். ஜெப கோபுரத்தின் செயல்பாடுகளை நடத்துவதற்கான ஆண்டுச் செலவு 60 லட்சம், ஜெபத்துடன் நீங்கள் அளிக்கும் உங்கள் விதையானது இந்த ஊழியத்தைத் தாங்கி, அநேகரின் வாழ்க்கையைக் கட்டியெழுப்ப உதவும். இந்த ஊழியத்திற்காக ஜெபியுங்கள், நிதியுதவி அளித்து இதில் பங்காளராகுங்கள், மேலும் அங்கே ஊழியம் செய்ய அல்லது மக்களைக் கவனித்துக்கொள்ள உங்கள் நேரத்தைத் தன்னார்வமாகச் செலவிடுங்கள்.
காருண்யா பல்கலைக்கழகம்
மனுக்குலத்திற்கு சேவை செய்ய அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் எதிர்காலத் தலைவர்களை உருவாக்குதல்
- காருண்யாவின் வேளாண்மை மாணவர்களில் ஒருவர், ஒரு முன்னணி ஜெர்மன் நிறுவனத்திடமிருந்து ஆண்டுக்கு 31 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உள்ளகப் பயிற்சி வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
- 3-ம் ஆண்டு உயிரித்தொழில்நுட்ப மாணவர் ஒருவர் ஜப்பானின் ஒசாகா பல்கலைக்கழகத்தில் உள்ளகப் பயிற்சி பெற்றுள்ளார். மேலும், கருண்யாவின் மூன்று மாணவர்கள் போலந்தின் Lodz தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் தங்களது வெளிநாட்டுப் பருவத் திட்டத்தைத் தொடர்கின்றனர், அங்கு அவர்கள் தானியங்குமயமாக்கல் மற்றும் ரோபோட்டிக்ஸ் குறித்த மேம்பட்ட படிப்புகளில் தேர்ச்சி பெறுகின்றனர்.
- காருண்யா, ‘Aurelion 2026’, என்ற தேசிய அளவிலான 24 மணி நேர ஹேக்கத்தானை ஏற்பாடு செய்தது. இது 168 அணிகள் தொழில்துறைக்குத் தயாரான தீர்வுகளை வடிவமைத்து உருவாக்க வழிவகுத்தது.
- காருண்யா பல்கலைக்கழகத்தில் 2026-2027-ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. முழு கல்விக் கட்டண விலக்கு மற்றும் பல தகுதி அடிப்படையிலான கல்வி உதவித்தொகைகள் உட்பட பல கோடி ரூபாய் மதிப்பிலான கல்வி உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு: http://admissions.karunya.edu என்ற வலைதளத்தைப் பார்வையிடுங்கள்.
சீஷா
கனிவான கவனிப்புடன் வாழ்வில் மீண்டும் நம்பிக்கை அளித்து, வாழ்வை மீண்டும் கட்டியெழுப்புதல்
- இந்தியா முழுவதும் உள்ள சீஷா நலத்திட்ட இடங்களில், 540-க்கும் மேற்பட்ட உள்ளூர் சமூகப் பெண்கள் பங்கேற்புடன் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. பலர் பெருமையுடன் தங்கள் திறன் பயிற்சி நிறைவுச் சான்றிதழ்களைப் பெற்று, பெலப்படுத்தப்பட்டனர்.
- கோயம்புத்தூரில் உள்ள சீஷாவின் கற்றல் மையங்களைச் சேர்ந்த 200 பிள்ளைகளுக்குப் புதிய ஆடைகளும், வானகரத்தில் உள்ள 60 பள்ளி மாணவர்களுக்கு வேலை வழிகாட்டுதலும் பள்ளி உபகரணங்களும் வழங்கப்பட்டன.
- மேலும், சீஷா தனது சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தியா முழுவதும் உள்ள 44 இலக்குத் திட்டக் கிராமங்களில் பங்கேற்பு கிராமப்புற மதிப்பீட்டு (PRA) பயிற்சியைத் தொடங்கியது.
இயேசு தேவை என்ற நிலையில் உள்ள மக்களுக்கு நாங்கள் உதவுவதற்கு, இந்த ஊழியத்திற்காக ஜெபியுங்கள் மற்றும் ஆதரவளியுங்கள். அவருடைய ராஜ்யத்திற்காக ஆத்துமாக்களைச் சேர்த்து, அவருடைய மகிமையை உலகிற்குப் பிரதிபலிப்போம்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


