தேவன் உங்களைச் செழிக்கச் செய்து, உங்கள் வாழ்வை கட்டுவார்
விலையேறப்பெற்ற என் நண்பரே, இந்த மாதத்தில் உங்களுக்காக நான் ஜெபித்தபோது, கர்த்தர் இந்த வாக்குத்தத்தத்தை என் இருதயத்தில் ஆழமாகப் பதிய வைத்தார்:
"சீயோனுக்கு உமது பிரியத்தின்படி நன்மைசெய்யும்; எருசலேமின் மதில்களைக் கட்டுவீராக." (சங்கீதம் 51:18).
நம் தேவன் தம் பிள்ளைகளை ஆசீர்வதிப்பது மட்டுமல்லாமல், அவர்களின் வாழ்க்கையில் உடைந்துபோன ஒவ்வொரு பகுதியையும் மீண்டும் கட்டியெழுப்புகிறார். சீயோன் என்பது எதைக் குறிக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? அது தேவன் வாசம்பண்ணும் ஸ்தலம். இன்று, இயேசுகிறிஸ்து மூலமாக உங்கள் இருதயமே அவருடைய சீயோனாக மாறியிருக்கிறது (1 யோவான் 4:4; 3 யோவான் 2). கர்த்தர் உங்கள் வாழ்க்கையை செழிக்கச் செய்ய விரும்பும் ஆறு அருமையான வழிகளை நாம் இப்போது பார்ப்போம்.
1. அவர் உங்களை நீதியில் செழிக்கச் செய்வார்: கர்த்தர் எப்போதும் நம் ஆத்துமாவைச் சீரமைப்பதன் மூலமே நம் வாழ்வில் தம் கிரியையைத் துவங்குகிறார். நம் வாழ்க்கை நீதியின்மேல் கட்டப்படும்போது, நமக்கு விரோதமாக எந்தத் தீங்கும் மேற்கொள்ள முடியாது. கர்த்தரே நம்மை கனப்படுத்தி, பாதுகாத்து, ஸ்திரப்படுத்துவார் (சங்கீதம் 23:3).
‘தேவன் யோசேப்பினுடைய வாழ்க்கையின் வெளிப்புறப் பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு முன், முதலில் அவனது ஆத்துமாவைத் தேற்றி, அவனை நீதியின் பாதைகளில் வழிநடத்தினார். கர்த்தர் அவன் உள்பகுதியில் தொடங்கி, வெளிப்பகுதிவரை மறுரூபமாக்கினார்.
2. துதியில் அவர் உங்களைச் செழிக்கச் செய்வார்: சூழ்நிலைகள் எவ்வாறாயினும் அவரைத் தொடர்ந்து துதிக்கும் இருதயத்தை ஒருவனுக்கு அளிப்பதே தேவன் தரும் மிகப்பெரிய ஆசீர்வாதங்களில் ஒன்றாகும். பதிலைக் காண்பதற்கு முன்பே அவருக்கு நன்றி செலுத்தும்படி தேவன் நம்மை அழைக்கிறார். துதி நம் இருதயத்தை நிரப்பும்போது, நம் கண்கள் பிரச்சினையிலிருந்து விலகி, எல்லாப் பிரச்சினைகளையும் விடப் பெரியவரான தேவன்மீது பதிக்கப்படுகின்றன. (சங்கீதம் 63:3; 103:1)
3. அவருடைய அதிசயமான சிருஷ்டியாக அவர் உங்களைச் செழிக்கச் செய்வார்: தேவன் நம் இருதயத்தை தமது சிங்காசனமாக்கி இருக்கிறார் என்பதை நாம் உணரும்போது, நம்மை நாமே வித்தியாசமாகப் பார்க்கத் தொடங்குகிறோம். நம்முடைய பலவீனங்களில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, நமக்குள்ளே வாசம் செய்யும் அவருடைய மகத்துவத்தை நாம் காணத் தொடங்குகிறோம். கர்த்தர் நமக்காகவும், நம் மூலமாகவும் அற்புதமான காரியங்களைச் செய்வார். (சங்கீதம் 139:14)
4. ஞானத்திலும் அறிவிலும் அவர் உங்களைச் செழிக்கச் செய்வார்: இந்த ஞானம் என்பது வெறும் மனித அறிவோ அல்லது கல்வியோ அல்ல; இது தேவனை தனிப்பட்ட விதத்தில் அறிந்துகொள்ளும் உறவின் மூலம் கிடைப்பதாகும். கர்த்தருடைய ஞானத்திலும் அறிவிலும் நம் ஆத்துமா செழிப்படையும்போது, அவர் நமக்கு முன்பாக ஒவ்வொரு நல்வழியையும் வெளிப்படுத்தி, நம்மை உயர்ந்த நிலைகளுக்கு உயர்த்துவார். (நீதிமொழிகள் 2:5,9)
5. அவர் தமது நன்மையினாலும், பரிபூரணத்தினாலும் உங்களைச் செழிக்கச் செய்வார்: நாம் சோர்வும் அதைரியமும் அடையும்போது, எலியாவை நினைவுகூருவோமாக. அவர் சோர்வும் மிகுந்த மனக்களைப்பும் அடைந்திருந்தபோது, தேவன் அவருக்குப் புத்துணர்ச்சியையும் பெலத்தையும் அளித்து, அவருக்குத் தேவையானவற்றையும் அளித்தார். கர்த்தர் நம்முடைய சோர்ந்த ஆவிக்குப் புத்துணர்ச்சி அளித்து, தளர்ந்துபோன நம் இருதயத்தைப் பலப்படுத்தி, நம்முடைய வாழ்வை அவருடைய அளவற்ற நன்மையினாலும் பரிபூரணத்தினாலும் நிரப்புவார். (எரேமியா 31:14, 25)
6. கர்த்தருடைய அன்பைப் பகிர்ந்துகொள்வதில் அவர் உங்களைச் செழிக்கச் செய்வார்: இயேசு நம் இருதயத்தைச் செதுக்கி, உருவாக்க நாம் இடமளிக்கும்போது, அவர் நம்மைத் தமது சாந்தம், தாழ்மை, மனதுருக்கம் மற்றும் தாராள குணம் ஆகியவற்றால் நிரப்புகிறார். நாம் ஜனங்களை அவருடைய கண்களால் பார்க்கவும், அவருடைய அன்பினால் அவர்களை நேசிக்கவும் தொடங்குகிறோம். (மத்தேயு 11:29)
எனக்கு விலையேறப்பெற்ற நண்பரே, அவருடைய கரம் நம் வாழ்வின்மீது உள்ளது; சங்கீதம் 51:18-ல் உள்ள அவருடைய வாக்குத்தத்தத்தின்படி, அவர் நம்மைச் செழிக்கச் செய்து, நம் வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும் அவருடைய பரிபூரண சித்தத்திற்கும் தயவுள்ள சித்தித்திற்கும் ஏற்ப கட்டியெழுப்புவார்.
என் அன்பின் பரலோகத் தந்தையே, உம்முடைய பிள்ளைகளை உள்ளிருந்து வெளியேயும் செழிக்கச் செய்யும். அவர்களுடைய வாழ்வின் உடைந்த பகுதிகள் அனைத்தையும் கட்டியெழுப்பும்; அவர்கள் இருதயத்திலுள்ள துக்கம் அனைத்தையும் நீக்கி, உம்முடைய ஞானத்தினாலும் அறிவினாலும் அவர்களை நிரப்பி, உம்முடைய பரிபூரண சித்தத்திற்கும் தயவுள்ள விருப்பத்திற்கும் ஏற்றவாறு அவர்களை ஆசீர்வதியும். இயேசுவின் நாமத்தில், ஆமென்.
மிகுந்த அன்புடனும் ஜெபத்துடனும்,
உங்கள் அன்பு சகோதரன்,
Dr. பால் தினகரன்
தலைமைச் செயல் அதிகாரியின் மேசையிலிருந்து:
ஜூன் மாதத்தில் உங்களால் ஏற்பட்ட நல்தாக்கம்
கடந்த மாதம், சென்னை பாரிமுனை மற்றும் வானகரத்தில் உள்ள இயேசு அழைக்கிறார் மையங்களில் நடைபெற்ற ஞாயிறு ஆசீர்வாதக் கூட்டங்களில் சகோதரர் சாமுவேல் தினகரன் ஊழியம் செய்தார்; அதேவேளையில், சென்னையில் உள்ள சகோதரர் டி.ஜி.எஸ். தினகரன் ஜெப கோபுரத்தில் நடைபெற்ற ஞாயிறு ஆசீர்வாதக் கூட்டத்தில் எங்கள் ஸ்தாபகர் Dr. பால் தினகரன் ஊழியம் செய்தார். பரிசுத்த ஆவியானவரின் நிறைவு, சரீர சுகம், குடும்ப சீரமைப்பு, ஆவிக்குரிய வரங்கள் மற்றும் தெய்வீக விடுதலையை மக்கள் பெற்றுக்கொள்வதற்காக தனித்தனியாக ஜெபங்கள் ஏறெடுக்கப்பட்டபோது, கர்த்தர் வல்லமையாய்க் கிரியைச் செய்தார். ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் இக்கூட்டங்களில் கலந்துகொண்டு மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டனர்.
Dr. பால் தினகரன் மற்றும் சகோதரர் சாமுவேல் தினகரன் ஆகியோரின் தலைமையில், சென்னை பாரிமுனையில் உள்ள இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்தில் 'ஜெபம் மற்றும் தீர்க்கதரிசன வல்லமை பயிற்சியின்' (PPE course) 5-வது அணி ஜூன் 22 அன்று தொடங்கியது. இதில் மொத்தம் 180 மாணவர்கள் இணைந்துள்ளனர்; இவர்களில் 115 பேர் நேரில் கலந்துகொள்கின்றனர், 65 பேர் இணையம் வழியாகப் பங்கேற்கின்றனர்.
மேலும், உங்கள் அன்பான ஜெபங்கள் மற்றும் தாராளமான ஆதரவினால், கடந்த மாதம் 3 கோடியே 37 லட்சம் ஜெப விண்ணப்பங்களுக்கு நாங்கள் ஊழியம் செய்யவும், அதன் மூலம் உடைந்த உள்ளம் கொண்டவர்களுக்குத் தேவனுடைய ஆறுதலையும் சுகத்தையும் கொண்டு வரவும் நாங்கள் பெலப்படுத்தப்பட்டோம். கடந்த மாதம்,
- தனிப்பட்ட ஜெபத்திற்காக 1.7 லட்சம் பேர் எங்கள் ஜெப கோபுரங்களை நாடி வந்தனர்.
- எங்கள் 24 மணிநேர ஜெப உதவி எண்கள் வாயிலாக 3.9 லட்சம் அழைப்பாளர்களுக்காக நாங்கள் ஊழியம் செய்தோம்.
- பதவு செய்யப்பட்ட குரல் பிரார்த்தனை (Dial-A-Prayer) மூலம் 4,830 பேர் ஜெபங்களையும் ஆவிக்குரிய ஆதரவையும் பெற்றனர்.
- சுமார் 60,000 கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல்களுக்காகத் தனிப்பட்ட முறையில் ஜெபிக்கப்பட்டது.
- எங்கள் ஜெப வீரர்கள் 47,200 பங்காளர்களின் பிறந்தநாளன்றும், 43,560 குடும்ப ஆசீர்வாதத் திட்ட பங்காளர்களின் திருமண நாளன்றும் அவர்களுக்காக ஜெபித்தனர்.
- இயேசு அழைக்கிறார் இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலம் ஒரு லட்சம் பேர் தேவனுடைய அன்பையும் ஊக்கத்தையும் அனுபவித்தனர்.
- எங்கள் சமூக ஊடகத் தளங்கள் 3.25 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களுக்கு விசுவாசம், ஆறுதல் மற்றும் நம்பிக்கை அளிக்கும் செய்திகளை வழங்கின.
- இயேசு அழைக்கிறார் மாத இதழ் சுமார் 3 லட்சம் வாசகர்களைப் பலப்படுத்தியது.
காருண்யா பல்கலைக்கழகம்
(கிறிஸ்துவை மையமாகக் கொண்ட கல்வி மூலம் வாழ்வை மறுரூபமாக்குதல் )
- அணுகக்கூடிய மறுவாழ்வுத் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்காக, குறைந்த செலவில் அதிக செயல்பாடு கொண்ட ஒன்றை உருவாக்கும் பொருட்டு, காருண்யா பேராசிரியர்கள் iHub, IIT Mandi-மிடமிருந்து ரூ.31.46 லட்சம் ஆராய்ச்சி மானியத்தைப் பெற்றுள்ளனர்.
- கூட்டு ஆராய்ச்சி, தொழில்துறை ஒருங்கிணைந்த கற்றல், உள்ளகப் பயிற்சிகள் மற்றும் தொழில் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக, காருண்யா பல்கலைக்கழகம் BIOZEN மற்றும் பிராடோ PRADO நிறுவனங்களுடன் மூலோபாய கூட்டாண்மைகளை ஏற்படுத்தியுள்ளது.
- மதிப்புமிக்க HackWithInfy 2027 திட்டத்தின் மூலம், காருண்யா பல்கலைக்கழகத்தின் பத்து மாணவர்கள் இன்ஃபோசிஸ் நிறுவனத்திடமிருந்து ஆண்டுக்கு ரூ.11 லட்சம் வரையிலான சம்பளத் தொகுப்புகளுடன், முன் வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.
சீஷா
(மகிழ்ச்சியைப் பரவச்செய்து, ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குதல்)
- சீஷா தனது 2026-ஆம் ஆண்டிற்கான ஸ்கூல் கிட் எனப்படும் 'பள்ளி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கியது. இத்திட்டத்தின் தொடக்க நாளன்று, சென்னையைச் சுற்றியுள்ள பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த 700 மாணவர்களுக்குப் பள்ளி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
- 2026-ஆம் ஆண்டின் 10-ஆம் வகுப்பு மற்றும் மேல்நிலைக் கல்வி (12-ஆம் வகுப்பு) தேர்வுகளில் சீஷா மாணவர்கள் சிறப்பான வெற்றியைப் பெற்றனர்; தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதுடன், அவர்களில் பெரும்பாலானோர் 400-க்கும் மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்றனர். இதில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு விருதுகள் வழங்கி அவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
- தென்னிந்தியா மற்றும் வட இந்தியாவில் நடத்தப்பட்ட கோடைக்கால முகாம்கள் மூலம் சீஷாவின் கற்றல் மையங்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களைச் சேர்ந்த 677 பிள்ளைகள் பயனடைந்தனர். மேலும், பின்தங்கிய குடும்பங்களுக்கு உதவும் வகையில் சென்னையில் “பார் மற்றும் புன்னகைசெய்” (See and Smile) எனும் இலவச கண் பரிசோதனை மற்றும் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
ஜூலை மாத ஊழியங்கள்
காட்கோபர் ஜெப கோபுரம்: இது மும்பை நகர மக்களுக்கு நம்பிக்கை, சுகம் மற்றும் மறுரூபத்தை அளிக்கும் ஒரு மையமாகும். நூற்றுக்கணக்கான உண்மையுள்ள ஜெப வீரர்களுக்குப் பயிற்சியளித்து அவர்களைத் தயார்படுத்துவதன் மூலம், கிறிஸ்துவின் அன்பை 1,20,000 மக்களுக்குக் கொண்டுசேர்க்கும் எங்கள் வெளிஊழியப் பணியை வலுப்படுத்த இந்த ஆண்டில் ஜெபத்துடன் திட்டமிட்டுள்ளோம். இந்த ஜெப கோபுரத்தின் செயல்பாடுகளுக்கான ஆண்டுச் செலவு 60 லட்சமாகும்; ஜெபத்துடன்கூடிய உங்கள் பங்களிப்பு இந்த ஊழியத்தைத் தொடர்ந்து நடத்தவும், எண்ணற்ற மக்களின் வாழ்வில் தேவனுடைய சமாதானம், மகிழ்ச்சி மற்றும் சுகத்தைக் கொண்டுவரவும் உதவும். ஆதரவளிக்க இங்கே கிளிக் செய்யவும்.
தொலைபேசி ஜெப கோபுரம்: ஒவ்வொரு மாதமும், 5,00,000-க்கும் அதிகமாக மக்கள் இயேசு அழைக்கிறார் தொலைபேசி வழி ஜெப சேவையின் மூலம் 7 இந்திய மொழிகளில் ஜெபத்தையும் நம்பிக்கையையும் பெற்று வருகிறார்கள். இந்தியா முழுவதும் இன்னும் அதிகமான மக்களைச் சென்றடையும் வகையில், பெங்காலி, போஜ்புரி மற்றும் குஜராத்தி மொழிகளையும் உள்ளடக்கி இந்த ஊழியத்தை விரிவுபடுத்தி வருகிறோம். ஒரு புதிய அமைப்பின் மூலம், அழைப்பாளர்கள் தங்கள் விசுவாசத்தை வலுப்படுத்திக்கொள்ளும் வகையில், தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ற ஜெபங்களையும் வேத வாக்குத்தத்தங்களையும் பெறுவார்கள். இந்த ஊழியத்திற்கு ஆதரவளிக்க இங்கே கிளிக் செய்யவும்
சிறப்பு ஆசீர்வாதக் கூட்டங்கள்:
- ஜூலை 5 – அண்ணாநகர் ஜெப கோபுரத்தின் 12-வது ஆண்டு விழா ஆசீர்வாதக் கூட்டம் – சகோதரர் சாமுவேல் தினகரன் ஊழியம் செய்வார்.
- ஜூலை 11 – பெதஸ்தா ஆசீர்வாதக் கூட்டம், கோயம்புத்தூர் – Dr. பால் தினகரன் மற்றும் குடும்பத்தினர் ஊழியம் செய்வார்கள்.
நீங்கள் இப்பகுதிகளிலோ அல்லது இவற்றைச் சுற்றியுள்ள இடங்களிலோ வசிப்பவராயின், இக்கூட்டங்களில் கலந்துகொள்ளுமாறு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
தேவனுடைய ராஜ்யத்திற்காக நாங்கள் இன்னும் செய்யவேண்டிய மிகப் பெரிய பணிகள் எங்கள் முன் உள்ளன. இப்பணிகள் அனைத்திற்காகவும் ஜெபியுங்கள்; www.jesuscalls.org என்ற இணையதளத்தின் மூலம் ஆதரவளித்து, இந்த ஊழியத்தில் நீங்கள் ஒரு பங்காக இருங்கள்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


