அன்பானவர்களே, இன்றைக்கு இந்த வசனத்தை வாசித்ததும், என் பாட்டியின் நினைவு வந்தது. வேதம், "முற்புறத்திலும் பிற்புறத்திலும் நீர் என்னை நெருக்கி, உமது கரத்தை என்மேல் வைக்கிறீர்" (சங்கீதம் 139:5) என்று கூறுகிறது. ஆம், என் பாட்டி கிட்டத்தட்ட என் துணிகளில் எல்லாம் என் பெயரின் முதலெழுத்துகளை நெருக்கமான தையலால் குறித்து வைத்திருப்பார்கள். கைக்குட்டை, டி-ஷர்ட் எதிலும் என் பெயரைப் பார்த்ததும், "இது என்னுடையது," என்று நினைத்துக்கொள்வேன்.
ஆம், இன்று ஆண்டவர், முற்புறத்திலும் பிற்புறத்திலும் உங்களை நெருக்கி, தம் கையை வைப்பதாகக் கூறுகிறார். ஆண்டவர் தம் முதலெழுத்துகளை உங்கள்மேல் பொறிப்பதாகக் கூறுகிறார். அவர் உங்களை மூடப் போகிறார்; மடிக்கப் போகிறார்; தம் முதலெழுத்துகளை உங்கள்மேல் பொறிக்கப்போகிறார். வேதம், "உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்," (ஏசாயா 43:1) என்று கூறுகிறது. ஆம், நீங்கள் ஆண்டவருடையவர்கள்.
இந்த உலகத்தில் நீங்கள் தனியே இருக்கலாம். உங்கள் பெற்றோர் அல்லது குடும்பத்தினர் உங்களை கைவிட்டிருக்கலாம். ஆனால், ஆண்டவர், தாம் உங்களுடன் இருப்பதாக வாக்குக்கொடுக்கிறார். அவர், "என் பிள்ளையே, கவலைப்படாதே. நீ என்னுடையவள்(ன்)," என்று கூறுகிறார். ஆம், ஆண்டவர் உங்களை நேசிக்கிறார். இந்த அன்பை எப்படி அனுபவிக்க முடியும்? நம் வாழ்க்கையை முழு மனதுடன் கிறிஸ்துவுக்குக் கொடுப்போம். அனுதினமும் நம் வாழ்க்கையை வழிநடத்தும்படி இயேசுவிடம் கேட்போம்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என்னை முற்புறத்திலும் பிற்புறத்திலும் நெருக்குவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம் கரத்தை என் மீது வைத்து, உமக்கு சொந்தமானவள்(ன்) என்று முத்திரையிடுவீராக. எப்போதும் உமக்குச் சொந்தமானவள்(ன்) என்று நான் நினைவுகூர உதவுவீராக. என் ஜீவனின்மேல் உம் பெயரை எழுதுவீராக; உம் சமுகத்தால் என்னை மூடுவீராக. என் வாழ்க்கையை முழு மனதுடன் உமக்கு அர்ப்பணிக்கிறேன். ஆண்டவராகிய இயேசுவே, தினமும் என்னை வழிநடத்துவீராக. நான் உம்முடையவள்(ன்) என்பதை என் வாழ்க்கைக் காட்டுவதாக. என்னைப் பேர்சொல்லி அழைக்கிறதற்காக உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


